தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..! <!– தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் … –>

தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் இரவு நேர மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிப்ரவரி 1ஆம் முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் … Read more

வாஷிங்டன் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, 4 பேர் காயம் <!– வாஷிங்டன் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, 4 பேர… –>

வடமேற்கு வாஷிங்டன் வான் நெஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கனெக்டிகட் அவென்யூவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.  Source link

அஸ்ஸாமில் நேற்று ஒரே நாளில் 246 தீவிரவாதிகள் சரண் – முதல்வர் ஹிமந்த பிஸ்வா <!– அஸ்ஸாமில் நேற்று ஒரே நாளில் 246 தீவிரவாதிகள் சரண் – முதல்… –>

அஸ்ஸாமில் நேற்று இரு வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த 246 பேர் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு மற்றும் திவா லிபரேஷன் ஆர்மி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 277 துப்பாக்கிகள், 720 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பாரக் பள்ளத்தாக்கில் இரண்டு புரூ-ரியாங் குழுக்கள் வரும் நாட்களில் சரணடையும் என்று பேசிய அவர், இதற்கான நடவடிக்கையை முடித்து பிப்ரவரிக்குள் தீர்வு … Read more

இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து – தமிழக அரசு <!– இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து – தமிழக அரசு –>

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,  வரும் 28ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும்  கூறப்பட்டுள்ளது. மேலும்,பிப்ரவரி 1 … Read more

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் <!– காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மு… –>

உத்தரக்கண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். கட்சிக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கிஷோர் ஆறாண்டுகளுக்கு நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில் அவர் டேராடூனில் பாஜகவில் இணைந்தார். உத்தரக்கண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் நாள் ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.  Source link

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி <!– தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்த… –>

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என உத்தரவு கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபடலாம் என்று அறிவிப்பு Source link

மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா..! <!– மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா..! –>

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 69 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த விமான நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் கையகப்படுத்தி உள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் மத்திய அரசு விற்பனை செய்த போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் விலைக்கு டாடா குழுமம் அதனை வாங்கியது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாக கொடுக்கப்படும் என்றும், மீதமுள்ள 15,300 கோடி ரூபாய் ஏர் … Read more

கொய்யா பழத்துக்காக பெண் பின்னால் சென்ற 4 வயது சிறுவன் கொலை.. முன்பகையால் நிகழ்ந்த கொடூரம்..! <!– கொய்யா பழத்துக்காக பெண் பின்னால் சென்ற 4 வயது சிறுவன் கொல… –>

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து  கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை  போலீசார் கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் புதன் கிழமை மதியம் 3 மணி அளவில் மாயமானதாக கூறப்படுகிறது. காணாமல் போன சிறுவனை உறவினர்கள் ஊர் முழுதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து சிறுவனின் தந்தை முத்தாண்டி … Read more

தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீசார் இருவர் உயிரிழப்பு <!– தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் நடத்திய துப்பாக்கி… –>

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசார் இருவருக்கு மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தனது மகன் தன்னுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாக தாயார் ஒருவர் தொலைபேசி வாயிலாக போலீசில் புகாரளித்துள்ளார். வீட்டிற்கு வந்த 3 போலீசாரை நோக்கி அவரது மகன் மெக் நீல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். 2 போலீசார் படுகாயமடைந்த நிலையில், புதிதாக பணியில் சேர்ந்த மற்றொரு போலீசார் மெக் நீலை துப்பாக்கியால் சுட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீசாரும், … Read more

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறையினர் <!– ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தடுப்ப… –>

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் மலைப் பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ராணுவ வீரர்களின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.     Source link