ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள் அந்த இடத்தை இழந்தார் கவுதம் அதானி

ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள், சொத்து மதிப்பு குறைந்ததால், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 3 ஆம் இடத்திற்கு சென்றுள்ளார். அதானி குழுமத்தின் 4  நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருந்த 3 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை முறையாக வழங்கவில்லை என்பதால் அந்த நிறுவன கணக்குகளை தேசிய பத்திர வைப்பு நிறுவனம் கடந்த 31 ஆம் தேதி முடக்கியது. இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து, கவுதம் அதானிக்கு 4 … Read more ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற இடத்தை பிடித்த 4 வாரங்களுக்குள் அந்த இடத்தை இழந்தார் கவுதம் அதானி

ரூ.25 கோடிக்கு ஏலம் போனது போலி மோனாலிசா ஓவியம்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட ஓவியமானது 25 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. கடந்த 1953 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஒரு கடையிலிருந்து இந்த மோனாலிசா ஓவியத்தை வாங்கிய ரேமண்ட் ஹெக்கிங் (Raymond Hekking), தான் வைத்திருப்பது பாரிஸ் லூவர் அருங்காட்சிகத்தில் இருந்து காணாமல் போன லியோனார்டோ டா வின்சியின் மோனலிசா ஓவியம் என நினைத்து வாழ்ந்துவந்தார். இந்நிலையில் 68 ஆண்டுகள் கழித்து இவர் இந்த ஓவியத்தை கிறிஸ்டி ஏல … Read more ரூ.25 கோடிக்கு ஏலம் போனது போலி மோனாலிசா ஓவியம்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், 2 நாட்களுக்கு சென்னை, நீலகிரி, கோவை, தேனி மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 21-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான … Read more தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம்

பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு பிறந்த அவர்களுக்கு தலை, மார்பு, இதயம், நுரையீரல், முதுகெலும்பு தனித்தனியாகவும், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் ஒரு நபருக்கு உள்ளது போன்று அமைந்திருந்தது.  நீண்ட நாட்கள் பிழைக்கமாட்டார்கள் என்று அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி மருத்துவர்களே கூறினர். இதனால் அவர்களை வளர்ப்பதற்கு பெற்றோர் மறுத்த நிலையில் பிபி இந்தர்ஜித் கவுர் என்பவர், தான் … Read more பஞ்சாப்பில் ஒட்டிய உடலுடன் கூடிய இரட்டை இளைஞர்கள் தனித்தனியாக வாக்குரிமை கேட்டு விண்ணப்பம்

28 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்.. வீடியோ காட்சி வெளியீடு!

சீனாவில், 28 மணி நேரத்திற்குள் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்து,புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. அந்நாட்டின் Changsha என்ற நகரில், Broad என்ற சீன கட்டுமான நிறுவனம் இந்த குடியிருப்பு கட்டிடத்தை கட்டியது. சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகள் என அனைத்தையும் நட்டு – போல்டுகள் மூலம் இணைத்து, மாடி மீது மாடி என மின்னல் வேகத்தில் கட்டிடம் தயாரானது. முழு கட்டிடமும் 28 மணி நேரம் 45 நிமிடங்களில் முடித்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்பும் … Read more 28 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்.. வீடியோ காட்சி வெளியீடு!

மேலும் என்னென்ன தளர்வுகள்? முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறு நாளுடன் முடிவடைகிறது. ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் ஏற்கனவே கூடுதல் … Read more மேலும் என்னென்ன தளர்வுகள்? முதலமைச்சர் ஆலோசனை

இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. பறக்கும் சீக்கியர் எனப் பெயர் பெற்ற மில்கா சிங் கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கவனிக்கப்பட்டு வந்த மில்கா சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எண்ணற்ற இந்தியர்களின் … Read more இந்தியாவின் தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்

ஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..!

ஈரானில் அதிபர் தேர்தல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் (Hassan Rouhani) பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். இதில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனினியின் ஆதரவாளராக செயல்பட்ட … Read more ஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..!

மேகதாது விவகாரம்- கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளதற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், மேகதாது அணை கட்டும் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என்றும், கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரித் தான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்குக் கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களிடையான ஆற்றுநீர்த் தகராறு சட்டப்படி நீரைத் தடுப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்துக்கும் உரிமை கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற … Read more மேகதாது விவகாரம்- கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

குஜராத்தில் சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது, தொற்றின் மூன்றாம் அலை தாக்கும் போது காற்றில் மட்டுமின்றி நீரின் வழியாகவும் வைரஸ் பரவலாம் என்று கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. குஜராத்தின் சபர்மதி ஆறு, சந்தோலா ஏரியிலிருந்து தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐ.ஐ.டி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இதனை மேற்கொண்டனர். அதில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட … Read more குஜராத்தில் சபர்மதி ஆற்றின் தண்ணீரில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிப்பு