கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகிபாபு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குனர் சிம்பு தேவர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மனுக்கு பட்டு புடவை சார்த்தி தரிசித்து … Read more

எகிறிய EB பில்.. பணம் கட்டாததால் கட்டில், பைக் பறிமுதல்.. அரை நிர்வாணத்தில் ஓடிய மூதாட்டி!

மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர … Read more

'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம்

மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி … Read more

நெல்லை: வடமாநில இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது

நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை … Read more

கேரளா: அச்சு அசலாக பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற ஸ்ரீதேவி ஆலய திருவிழா

கேரளாவில் பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் – பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் … Read more

நடிகர் செந்திலின் பீமரதசாந்தி விழா: திருக்கடையூர் அபிராமி கோவிலில் இன்று நடைபெறுகிறது

நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் … Read more

கோவையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவையிலிருந்து சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் 80 சதவீதம் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக … Read more

கர்நாடகாவில் தேர்தல் பேரணியில் பணத்தை அள்ளி வீசிய காங். தலைவர் – வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸோ, ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரங்களை எடுத்து வருகிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தீவிரமாய்ச் … Read more

பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?

தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து  அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் … Read more

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி: கைதான இயக்குநர்கள்! சூடு பிடிக்கும் போலீஸ் விசாரணை!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ. 2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தில், பொருளாதார … Read more