நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.. ஆளுங்கட்சி தலையீடு.. கொந்தளிப்பில் விஜயகாந்த்.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிப்ரவரி 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இடையில் ஒருநாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி, ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து ' தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம் – ரிசர்வ் வங்கி விளக்கம்..!

  குடியரசு தினவிழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை 27.01.2022 ஜனவரி 26,2022 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற எழுபத்தி மூன்றாவது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்பில் இது வெளியிடப்படுகிறது . 2. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு … Read more

பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு..!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வரும் 31ம் தேதியுடன் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டடது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12 ம் … Read more

ரேஷன் கடைகளில் ராகி, கம்பு, திணை உள்ளிட்ட சிறு தானியங்கள் விற்பனை-தமிழக அரசு.!

ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை … Read more

சொத்துக்காக துன்புறுத்திய மருமகள்.. மாமியார் தீக்குளிக்க முயற்சி..!

சொத்தை எழுதி வைக்ககோரி மருமகள் துன்புறுத்தியதால் மாமியார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சின்னேரி வயக்காட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (55). இவர் இன்று சேலம் போலீஸ் கமிசனர் அலுவலகத்துக்குள் மண்ணெண்னெய் கேனுடன் வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மண்னெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் அவரை விசாரணை நடத்தினர். சேலத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் தனது மருமகள் காந்திமதி சொத்தை எழுதி தருமாறு துன்புறுத்தியதால் தீக்குளிக்க முயன்றதாக … Read more

இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு..!

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கை நீக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுபாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டனர். அதன் படி, 28-1-2022 முதல் … Read more

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பணிநியமனம்.. ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு சீமான் கடும் கண்டனம்..!

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர்களுக்கான பணிநியமனத்திலும், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் பணிநியமனத்திலும் ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல்  என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,   சென்னை உயர்நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வகுப்புவாரிப்பிரநிதித்துவம் முழுமையாகக் கடைபிடிக்கப்படாததால், பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களுக்கான இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். … Read more

பீகார் : கள்ள சாராயத்தால் தொடரும் உயிரிழப்பு.. ஐவர் பரிதாப பலி..!

கள்ளசாயாரம் குடித்து ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால், அங்கு பல இடங்களில் கள்ளசாராய விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புக்சர் மாவட்டம் அன்சார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலி மதுபானத்தை வாங்கி குடித்துள்ளனர். அவர்களில் 8 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை … Read more

#BREAKING : கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-தமிழக முதல்வர்.!

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் அருகே இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய அரசு கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கிய … Read more

விப்ரோ கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு.!!

விப்ரோ அதிகாரபூர்வ இணையதளத்தில் ஸ்பிரிங் பூட்-லீட் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : ஐசிஐசிஐ வங்கி பணியின் பெயர் : ஸ்பிரிங் பூட்-லீட் கல்வித்தகுதி : பட்டப்படிப்பு பணியிடம் : சென்னை தேர்வு முறை : நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்  மொத்த … Read more