வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! – சுமந்திரன் எம்.பி கடும் கண்டனம்

வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்படவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வசந்த கரன்னாகொட ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.  இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 11 இளைஞர்களை கடத்தியதாக வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை … Read more வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! – சுமந்திரன் எம்.பி கடும் கண்டனம்

நாடு முடக்கப்படுகின்றதா? – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.        Source link

ஒமிக்ரோன் இலங்கையில் வேகமாக வியாபிக்குமா?

கோவிட் ஒமிக்ரோன் திரிபு இலங்கையில் வியாபிக்க வாய்ப்பில்லை என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் திரிபு ஐரோப்பா மற்றும் இலங்கையில் வேகமாக பரவும் சாத்தியங்கள் குறைவு என தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வைரஸ் திரிபு கோவிட் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாவிட்டாலும், பூஸ்டர் தடுப்பூசிகளின் மூலம் தொற்றிலிருந்து பாதுகாப்பு … Read more ஒமிக்ரோன் இலங்கையில் வேகமாக வியாபிக்குமா?

இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கடனாக வழங்கும் இந்தியா!

இலங்கைக்கு ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தக் கடன்கள் கிடைக்கப்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வழங்கப்படும். மீதமுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக. எவ்வாறாயினும், இந்த கடன் வசதியை இந்திய பொருட்களை கொள்வனவு … Read more இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கடனாக வழங்கும் இந்தியா!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை பறித்த ரயில் விபத்து! மகன் தொடர்பில் வெளியான தகவல்

பதுளையில் இருந்து கொழும்பு,கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,இவ்வாறு உயிரிழந்தவர்களில் மகன் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புளை – பத்தனை போகாவத்தை பகுதியில் புதிய வீடமைப்பு திட்டத்தில் வசித்து வந்த எஸ்.பிரான்சிஸ் (70) (தந்தை), பி.கமலாவதி (65) (தாய்), பிரான்சிஸ் குமார் ராஜ் (40) (மகன்) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக … Read more ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை பறித்த ரயில் விபத்து! மகன் தொடர்பில் வெளியான தகவல்

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென கீழே விழுந்து மரணம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மத்தி பகுதியில் சிறுவன் ஒருவன் இன்று விளையாடிக்கொண்டிருந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் அவனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென கட்டடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், குறித்த சிறுவன் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் … Read more யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென கீழே விழுந்து மரணம்

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

Courtesy: One India Tamil குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை களத்தில் இருந்து நேரடியாகவே பெற்றுள்ளோம். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது … Read more வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?

எதிர்வரும் பண்டிகைக் காலம் குறித்து வெளியான எச்சரிக்கை

பண்டிகை காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பில் இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதி  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிடுகையில்,  நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது பாரியளவில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாமை அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்  … Read more எதிர்வரும் பண்டிகைக் காலம் குறித்து வெளியான எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பணம் அனுப்புவோருக்கான எச்சரிக்கை! மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி நடவடிக்கை

சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். உரிய முறையில் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கணக்குகள் தடை செய்யப்படுகின்றன. சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். … Read more வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பணம் அனுப்புவோருக்கான எச்சரிக்கை! மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி நடவடிக்கை

கொலை செய்யப்பட்ட இலங்கையருக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

எதிர்வரும் 10 ஆம் திகதி பாகிஸ்தானில் விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – சியால்கொட் நகரில்  பிரியந்த குமார என்ற இலங்கையர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், நினைவுகூரும் வகையிலும் இந்த கண்டன தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது. இதேவேளை, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டதாக  செய்திகளின் வெளியாகின. இதன்படி, இந்த … Read more கொலை செய்யப்பட்ட இலங்கையருக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கை