கோவிட் தொற்றால் அதிகளவில் உயிரிழந்தவர்கள் யார்? வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் என தெரியவந்துள்ளது. இலங்கையில் கொடிய தொற்றுநோயால் உயிரிழந்தவர்களில் 52%ற்கும் அதிகமான மக்கள் நீரழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் … Read more

Port city அண்டியுள்ள வலயத்தில் கழிவுபொருட்களை கொட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு Port city நகரத்தை பார்வையிடுவதற்காக வரும் நபர்கள் ,இதனை அடுத்துள்ள சமுத்திர வலயத்தில் கழிவுப்பொருட்களை வீசினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட செல்லும் போது அல்லது ஏனைய சந்தர்ப்பங்களில் சமுத்திர சுற்றாடலில் கழிவு பொருட்களை போடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்சனி லஹாந்தபுர தெரிவித்துள்ளார். இதேவேளை சமுத்திர வலயத்தில் கழிவு பொருட்கள் … Read more

ஜனாதிபதி குறித்து வைரலாகியுள்ள காணொளி! – அரச தரப்பு விளக்கம் (Video)

சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது என பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் காணொளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினுடையது அல்ல, இது தீய நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. காணொளியில் உள்ள நபர் ஒரு வித்தியாசமான நபர், இது அவரது தனிப்பட்ட தருணம், அவரை ஜனாதிபதியாக காட்டுவதற்காக திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் … Read more

வடக்கு மாகாண கல்வி நிலைமை குறித்து வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் உரை

வடக்கு மாகாணம் கல்வியில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டிருப்பதாக, ஜனாதிபதியினால் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த மாகாணத்தில் பயிற்சி பெறாத ஆசிரியர் 50 வீதம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், 20 செயலாளர்கள் பிரிவுகளிலும் ஆகக்குறைந்த வகையில் ஒரு தேசிய பாடசாலை இல்லை என்றும் தெரிவித்தார். ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒரு தேசிய பாடசாலை அமைய … Read more

இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்! – குவைத் எயார்வேஸ் நடவடிக்கை

இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு குவைத் எயார்வேஸ் விமான சேவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் “டொலர் நெருக்கடி” மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எற்கனவே, குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் ,பெற்றோருக்கும் விசேட அறிவுறுத்தல்

நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பிரதி பரீட்சை ஆணையாளர் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 255,062 சிங்கள மொழிமூல பரீட்சாத்திகளும், 85,466 தமிழ் … Read more

இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொலை! நாடாளுமன்றத்தில் பகீர் தகவல்

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றில் சுமத்தினார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி, தமது உரையில், தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை என கூறியிருந்தார். எனினும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமையும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்ததையும் மனித உரிமை மீறல்களாகும். மகர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் … Read more

உலக நாடுகளில் கொரோனா:தற்போதைய நிலவரம்

உலக நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.27 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 கோடியே 27 இலட்சத்து 81 … Read more

மனைவி மீதான அதீத காதல்! – கொழும்பில் குண்டு வைத்த நபர் (Video)

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சந்தேகநபர் குறித்த தேவாலயத்தின் மீது வெறுப்புடன் இருந்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு இதற்கு முன்னர் கைக்குண்டொன்று வைக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு வைக்கப்பட்டமை … Read more