கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான பகீர் தகவல்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை – மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணான தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். தற்போது டாம் வீதி பொலிஸ் … Read moreகர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான பகீர் தகவல்

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் கர்ப்பிணி காட்டு யானை ஒன்றிற்கு அன்னாசிப்பழத்தில் சிலர் வெடிவைத்து குடுத்ததில் அதனை உண்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. விசமிகள் கொடுத்த அன்னாசியை உண்ட யானை மிகுந்த வலியுடன் அந்த கிராமத்தைச் சுற்றி வந்தபோதும் யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்ற யானையை வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த … Read moreகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

அரச பொசொன் நோன்மதி வைபவம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

அரச பொசொன் நோன்மதி வைபவம் நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது. இதற்கமைவாக எதிர்வரும் ஆறாம் திகதி வரை பொசொன் நோன்மதி வைபவம் இடம்பெறும். விசேட பொசன் சமய நிகழ்வுகள் பலவற்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மிகிந்தலை ரஜா மஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

பெரும்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் மகன்!

குற்றவியல் புலனாய்வுத் துறையில் பணியிலிருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் புறக்கோட்டை பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேகநபரிடமிருந்து 1 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டது. போதைப்பொருளை பிறிதொருவரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தபோது அவர் சிக்கிய நிலையில் அவருடன் 30 வயதான மேலுமொருவருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை ஏற்கனவே போதைப்பொருளுடன் சில முறை அவர் சிக்கியபோது, தந்தையின் செல்வாக்கினால் விடுவிக்கப்பட்ட விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை … Read moreபெரும்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் மகன்!

இன்று சந்திர கிரகணம்

இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் இன்று 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெறும் என்றும் அவர் கூறினார்.  சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி … Read moreஇன்று சந்திர கிரகணம்

20% இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம்!

வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் அபாய நிலையை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் பட்டுவத்த தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் மற்றும் குவைட் நாடுகளில் உள்ள இலங்கையரே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது

நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின்போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப் பின்பற்றியமையினாலும் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொசொன் றோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேசத்தை நாகரிகமடையச் செய்த முதிர்ச்சியடையச் செய்த தேசத்தை முன்னேற்றி பாதுகாத்த புத்த மதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து … Read moreபுத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு.. கைது செய்யப்பட்டு 4மணி நேரத்தில் வெளியே வந்த இஸ்மாயில்? உள்ளே இருக்கும் ரியாஜ் பதியுதீன்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிகின்ற போதிலும் விசாரணைகளை மழுங்கடிக்க நாட்டின் அதிகாரமிக்க நபர் ஒருவர் அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த 22ம் திகதி கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தி இருந்தார். ஆனாலும் அழுத்தம் கொடுக்கும் பிரபல நபர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குண்டுத் தாக்குதல் தொடர்பில் … Read moreஉயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு.. கைது செய்யப்பட்டு 4மணி நேரத்தில் வெளியே வந்த இஸ்மாயில்? உள்ளே இருக்கும் ரியாஜ் பதியுதீன்!

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துங்கள் – ஜனாதிபதி பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். கொவிட் 19 ஒழிப்பு விசேட செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற … Read moreவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துங்கள் – ஜனாதிபதி பணிப்புரை