ஜியோவின் இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்கள்! 56 நாட்களுக்கு ஜாலியாக இருக்கலாம்

ஒவ்வொரு மாதமும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் ஸ்மார்ட்போனை ரீசார்ஜ் செய்ய வேண்டும். நீங்கள் ரீச்சார்ஜ் செய்யும் பிளானை பொறுத்து உங்களின் வேலிடிட்டி மாறும். ஜியோவை பொறுத்தவரை பல்வேறு ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. ப்ரீப்பெய்ட் யூசர்களுக்கு சிறந்த சலுகைகளுடன் கூடிய திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான்.  ஜியோவின் ப்ரீபெய்ட் பிளான் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.533 ஆகும். இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் சந்தையில் கிடைக்கிறது. நீங்கள் … Read more

மின் இணைப்புக்கு ஆதார் நகல் அவசியமில்லை

TNEB- Aadhar Link: ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ஆதார் நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவச மின்சாரம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது சரியான பயனாளிகளுக்கு செல்கிறதா? என்பதை அடையாளம் காண தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை … Read more

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் – பாம்பன் மறுசீரமைப்பு பணிகள் 84% நிறைவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கி.மீ நீள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 84% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 333 அடி தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து 99 அணுகு பால கண்கள் (துவார இடைவெளி ) பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கர்டர்கள் அமைக்கும் … Read more

ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் கிடைக்கும் அசத்தல் லேப்டாப்: பிளிப்கார்ட்டில் அதிரடி

மலிவான மடிக்கணினி: தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் லேப்டாப்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரியவர்கள் அலுவலக வேலைகளைச் செய்வதற்கும், குழந்தைகள் தங்கள் பள்ளிப் பணிகளைச் செய்வதற்கும், அவற்றுக்கான குறிப்புகளை எடுப்பதற்கும் மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் லேப்டாப் வாங்க திட்டமிட்டு, அதற்கான உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.  ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் கிடைக்கும் லேப்டாப் பற்றி … Read more

Apple iPhone 13: 45 ஆயிரம் ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம்! எப்படி?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தலமான Flipkart நிறுவனம் அதன் ஷாப்பிங் தலத்தில் ஆப்பிள் ஐபோன் 13 (128GB) மாடல் பேஸ் வேரியாண்டிற்கு ஸ்மார்ட் போனிற்கு 65,999 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. அந்த போன் விலை 69,900 ஆயிரம் ரூபாய் ஆகும். அதற்கு 5% தள்ளுபடி விலை வழங்கி நமக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் இதை நாம் மேலும் குறைத்து 45ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும். அது எப்படி என்பது குறித்து காணலாம். … Read more

Emergency SOS வசதி மூலம் அலாஸ்காவில் ஒரு உயிரை காப்பாற்றிய iPhone 14!

ஆப்பிள் நிறுவனம் வெளிட்ட ஐபோன் 14 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்த எமெர்ஜென்சி SOS via Satellite மூலம் காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வடக்கு மாகாணமான அலாஸ்காவில் வழிமாறிப்போன ஒரு நபர் அங்கு இருந்த கடும் குளிரில் பாதிக்கப்பட்டார். பிறகு தான் வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் போனில் இருக்கும் SOS வசதி பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மீட்புப்படையினருக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அவரது இருப்பிடத்தை அறிந்த மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். இந்த வசதி … Read more

பிளிப்கார்ட், அமேசானை பின்னுக்குத் தள்ளிய ஷாப்பிங் வெப்சைட்: அசத்தல் விலை, தரம்

ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம்: தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பல வித முன்னேற்றங்கள் நமது வாழ்வின் பல அம்சஙக்ளை மாற்றியுள்ளன. அதில் நாம் ஷாப்பிங் செய்யும் முறையும் ஒன்றாகும். முன்பெல்லாம் பல கடைகளுக்கு சென்று, அலைந்து, பல வகையான பொருட்களை பார்த்து, நம் நேரத்தை செலவு செய்து ஷாப்பிங் செய்து வந்தோம். ஆனால், ஆன்லைன் ஷாப்பிங் என்ற ஒன்று வந்தவுடன், இவை எதுவுமே தேவை இல்லை என்றாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்தே பல வித பொருட்களை பார்த்து, அதில் நமக்கு வேண்டியவற்றை … Read more

இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த குஜராத் மாநில படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த நவம்பரில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் புயல்களை சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். “அண்மையில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” … Read more

ப்ளூடூத் டிவைஸ்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… – ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க எளிய வழிகள்

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம். எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு … Read more

இரண்டு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு! வந்தாச்சு புது அப்டேட்

யூசர்களின் கோரிக்கையின் அடிப்படையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை அன்றாடம் முயற்சி செய்து வருகிறது. இப்போது, இன்னொரு அம்சமும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட உள்ளது. அதன் சோதனை நடந்து வருகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் தங்கள் கணக்குகளை Android டேப்லெட்கள் போன்ற இரண்டாம் நிலை சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும். தற்போது இந்த அம்சம் WhatsApp பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வாட்ஸ் அப் அப்டேட் ஆண்ட்ராய்டு ஆணையத்தின் தகவலின்படி, புதிய அம்சம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை … Read more