திருமணத்தின்போது உருவக்கேலி செய்தனர்: மஞ்சிமா

மலையாள நடிகை மஞ்சிமா மோகனும், தமிழ் நடிகர் கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. மஞ்சிமா மோகன் பொதுவாக உயரம் குறைவாகவும், எடை கூடுதலாவும் கொண்ட உடலமைப்பு கொண்டவர். இதனால் அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே உருவக்கேலிக்கு ஆளாகி வருகிறார். இடையில் உடல் எடை குறைத்தும் சில படங்களில் நடித்தார். இடையில் சில காலம் நடிப்புக்கு பிரேக் விட்டதில் மீண்டும் எடை கூடிவிட்டார். … Read more

மெக்காவில் ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது பதான் மற்றும் ஜவான் படங்களில் நடித்துள்ளார். சவுதி அரேபியா சென்றுள்ள இவர் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு உம்ரா சென்றார். பொதுவாகவே ஷாருக்கான் சவுதி அரேபியா செல்லும்போதெல்லாம் உம்ரா செல்வது வழக்கம். கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் உம்ரா செல்வதால் அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளை உடை அணிந்து அவர் உம்ரா செய்யும் படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது.

நடிகை நோரா அமலாக்கத்துறை முன் ஆஜர்

பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்தவாறே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் சுகேஷுக்கு உதவியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஏற்கெனவே ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் … Read more

விட்னஸ் : 9ம் தேதி 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்

தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா தயாரித்துள்ள படம் விட்னஸ். ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இயக்குனர் தீபக் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம். பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத … Read more

விஜய்யின் ‘வாரிசு’ உடன் மோதும் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டின்போது, பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். … Read more

சிந்தி முறைப்படி நாளை ஹன்சிகா திருமணம்

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் நாளை டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான 'சங்கீத்' நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை … Read more

அஜித்தின் டூப் : வைரலான போட்டோ

பொதுவாகவே எல்லா முன்னணி நடிகர்களுக்கும் டூப் இருப்பார்கள். ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் முன்னணி நடிகர்களுக்கு பதிலாக டூப் நடிப்பார்கள். காரணம் பலகோடி முதலீட்டில் எடுக்கப்படும் படம் சிறு விபத்து காரணமாக நின்றுவிடும் வாய்ப்பு உண்டு. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வழக்கத்தில் இருக்கும் விஷயம். பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களுக்கு டூப்பாக நடிக்க நிரந்தரமாக ஒருவரை வைத்திருப்பார்கள். ஆனால் அவரை வெளி உலகிற்கு காட்ட மாட்டார்கள். தங்கள் இமேஜ் போய்விடும் என்பதால் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் அஜித் … Read more

பிரபல காமெடி நடிகர் மரணம்.. முதல்வர், திரையுலகினர் இரங்கல்..!

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 68. கேரளாவில், நாடக கலைஞராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கே.எஸ்.பிரேம் குமார் என்ற கொச்சு பிரேமன். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது முதல் படம் ‘தில்லிவாலா ராஜகுமாரன்’. 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் … Read more

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் நடந்த மரணம் – ‘இந்தியன் 2’ போல் மற்றுமொரு நிகழ்வு

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது கிரேன் ரோப் அறுந்து கீழே விழுந்ததில் சண்டை காட்சியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரி, காவல்துறை உயர் பயிற்சியகம் பின்புறம் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிமாறன் இயக்கி, சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிக்காக கிங் கேசவன் மாஸ்டர், எட்டுப் பேருடன் சேர்ந்து சண்டைக்காட்சி எடுத்துக் கொண்டிருந்த போது, சண்டைக் காட்சியில் ஈடுபட்ட சுரேஷ் (59) … Read more

டிச., 10ல் ‛லத்தி' டிரைலர் ; 22ல் படம் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி நான்கு மொழிகளில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைத்துள்ள இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடித்த போது இரண்டு முறை காயம் அடைந்தார் விஷால். மேலும் சுனைனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. … Read more