கமலுடன் இங்கிலாந்து எம்.பி.சந்திப்பு: சினிமா எதிர்காலம் குறித்து ஆலோசனை

இங்கிலாந்து நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர் லார்ட் வேவர்லி நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். உலகளாவிய கலாச்சாரத்தை உலகெங்கும் பறை சாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தனர். சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது “கமல்ஹாசன் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து … Read more

ராஜமௌலி Vs மணிரத்னம்?… ஆரம்பித்து வைத்த ராம்சரண் வீடியோ; ட்விட்டரில் களேபரம்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். லைகா தயாரிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலரும் நடித்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 30ஆம் தேதி படம் வெளியான்கி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளாக மக்களின் மத்தியில் புழங்கிய கதை என்பதாலும், பலரும் எதிர்பார்த்திருந்ததாலும் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து படத்தை ரசித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் எதார்த்தமாக படமாக்கியிருப்பதாகவும் … Read more

“பெரியாரிடம் எனக்கிருக்கும் கேள்விகள் இதுதான்!" – சத்யராஜ் `பளிச்' பேட்டி @1994 #AppExclusive

கோதுமைநிற ரஞ்சிதாவோடு குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தார் சத்யராஜ். வெஸ்ட் C.I.T நகர் நந்தி ஹவுஸில் ‘தோழர் பாண்டியன்’ படப்பிடிப்பு…. வேறொரு காட்சியை டைரக்டர் மணிவண்ணன் படமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து வரும் தனது காட்சிக்காக மேக்கப்போடு சத்யராஜ் இருந்தபோதுதான் படத்தின் நாயகியுடன் சுவாரஸ்ய அரட்டை… இடையே நாம் புகுந்தோம் (கரடி… கரடி). டின்னரைப் பற்றிப் பேச்சைத் துவங்கியதும் சேரில் சரிந்திருந்த சத்யராஜ், நிமிர்ந்து உட்கார்ந்தார். சில விநாடி யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார்.  “நான் டின்னருக்குக் கூப்பிடறதா இருந்தால் தந்தை … Read more

உலகளவில் ரூ.200 கோடி ; அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் வசூலைக் கடந்த 'பொன்னியின் செல்வன்'

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ஒரு நாள் முன்னதாக ப்ரீமியர் காட்சிகளும் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 4 மில்லியன் யுஎஸ் … Read more

'பொன்னியின் செல்வன்' : இளம் நந்தினியாக ஆச்சரியப்பட வைத்த சாரா

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த படம் 'தெய்வத் திருமகள்'. அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி சாரா. அதன் பிறகு 'சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லுகருப்பட்டி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா. டீன் ஏஜ் வயதில் உள்ள சாரா படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய தோற்றமும், … Read more

பொன்னியின் செல்வன்தான் பாகுபலியைவிட பெஸ்ட்… அடுக்கடுக்கான காரணங்கள்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் பலர் செய்த முயற்சி கைகூடாமல் போக மணிரத்னம் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக பல நடிகர்களை வைத்து 150 நாள்களில் ஷூட்டிங்கையும் முடித்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் கொண்டாடிக்கொண்டிருக்க மற்றொரு தரப்பினர் படம் திருப்திப்படுத்தவில்லை என்கின்றனர். இந்த இரண்டு தரப்பினர் மட்டுமின்றி மூன்றாவது தரப்பினரும் இருக்கின்றனர். அவர்கள் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு … Read more

பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற புஷ்கர், காயத்ரி, சாம்

புஷ்கர், காயத்ரி தம்பதிகள் இயக்கிய விக்ரம் வேதா படம் இங்கு பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அந்த படத்தை அதே பெயரில் பாலிவுட்டில் இயக்கினார்கள். மாதவன் நடித்த கேரக்டரில் சயீப் அலிகானும், விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் ஹிர்த்திக் ரோஷனும் நடித்தார்கள். தமிழில் இசை அமைத்த சாம்.சி.எஸ் இசை அமைத்திருந்தார். பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நேரத்தில் தற்போது விக்ரம் வேதா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் புஷ்கர், காயத்ரி, மற்றும் … Read more

ஏ.கே61 படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் காதல் ஜோடி; மாஸ்டர் நடிகருக்கும் வாய்ப்பு

அஜித்தின் ஏகே 61 படம் மாஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஹெச். வினோத். இவர்கள் இருவரின் கூட்டணியில் கடைசியாக வெளியான படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்ட நிலையில், ஏகே 61 படத்திற்கு ‘துணிவு’ என டைட்டில் வைத்துள்ளனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாவதாக கூறப்படுகிறது. மங்காத்தா பாணியில் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது.  அஜித்துடன் மஞ்சுவாரியர், சர்பாட்டா பரம்பரை படத்தின் … Read more

'கோச்சடையான்' பாணியில் 'ஆதி புருஷ்' டீசர்

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. படத்தை மோஷன் கேப்சரிங் முறையிலும் உருவாக்கியுள்ளார்கள். பிரபாஸ், கிரித்தி, சைப் அலிகான் ஆகியோரது கதாபாத்திரங்கள் நிஜமாக நடிக்கப்பட்டும், மற்ற கதாபாத்திரங்கள் அனிமேஷன் வகையிலும் இப்படம் … Read more