தனிமையே பேரின்பம், நிம்மதினு ட்வீட்டிய செல்வராகவன்: விவாகரத்தானு கேட்கும் நெட்டிசன்ஸ்

ஹைலைட்ஸ்: செல்வராகவனின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம் நானே வருவேன் படத்தை இயக்கும் செல்வராகவன் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ட்விட்டரில் அவ்வப்போது தத்துவம் கூறுவார். இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி என்றார். செல்வராகவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இதை மட்டும் உங்களின் மனைவி பார்த்தால் அடி விழுவது நிச்சயம். … Read more தனிமையே பேரின்பம், நிம்மதினு ட்வீட்டிய செல்வராகவன்: விவாகரத்தானு கேட்கும் நெட்டிசன்ஸ்

'தாமிரபரணி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால், பிரபு

விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.   அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் விஷால்-பிரபு … Read more 'தாமிரபரணி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால், பிரபு

மகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்களைத் திறப்பதை காலம் தாழ்த்தியே வந்தார்கள். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என மாநில அரசு சற்று முன் அறிவித்துள்ளது. … Read more மகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி

ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு பிரிட்டன் கடற்படையில் கிடைத்த கவுரவம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

By Kalaimathi | Updated: Saturday, September 25, 2021, 21:01 [IST] லண்டன்: ஜேம்ஸ் பாணட் பட நடிகரான டேனியல் கிரேக்கிற்கு பிரிட்டன் கடற்படையில் மிகப் பெரிய கவுரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸின் 25வது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நோ டைம் டூ டை படத்தில் பிரபல … Read more ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு பிரிட்டன் கடற்படையில் கிடைத்த கவுரவம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

திருமணம் செய்யும் அனுஷ்கா; தீயாய் பரவும் தகவல்

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர். தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா (Anushka Shetty). தற்போது கடந்த சில நாட்களாக அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து வருகின்றது. பாகுபலி … Read more திருமணம் செய்யும் அனுஷ்கா; தீயாய் பரவும் தகவல்

ஒரே நாளில் 11 கோடி ; மாஸ் காட்டிய லவ் ஸ்டோரி

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் கூட 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய படம் ஏதாவது வெளியாகி ரசிகர்களை வழக்கம்போல தியேட்டருக்கு வரவழைக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படத்திற்கும் இதே நிலைதான். இந்த நிலையில் தெலுங்கில் நாக சைதன்யா சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள … Read more ஒரே நாளில் 11 கோடி ; மாஸ் காட்டிய லவ் ஸ்டோரி

அம்பிகா ராதா,நக்மா ஜோதிகா மாதிரி இனியா தாரா …யார் அக்கா யார் தங்கை?

By Vinoth R | Updated: Saturday, September 25, 2021, 21:01 [IST] சென்னை : திரைத்துறையில் கணவன் – மனைவி இருவரும் நடிப்பது என்பது அனைவரும் சுவாரஸ்யமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. சூர்யா ஜோதிகா, குஷ்பு சுந்தர் சி , ராதிகா சரத்குமார் , சேத்தன் தேவதர்ஷினி என சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகள் உண்டு. பல நேரங்களில் படங்களை பார்த்து முடித்த பின்னர்தான் இவர்கள் நிஜ கணவன் மனைவி ஆயிற்றே … Read more அம்பிகா ராதா,நக்மா ஜோதிகா மாதிரி இனியா தாரா …யார் அக்கா யார் தங்கை?

அடிமை ஆட்சி நடத்துகிறார் முதல்வர்! புதுவையில் முழு அடைப்பு போராட்டம்!

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தொடர் போராட்டங்களை நடத்த புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது; “மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில், அதாவது 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. … Read more அடிமை ஆட்சி நடத்துகிறார் முதல்வர்! புதுவையில் முழு அடைப்பு போராட்டம்!

சூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சின்னத்திரையில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் சீசன் முடிந்து அவர்கள் வெளியில் செல்லும்போது பெரிய ரசிகர் கூட்டத்துடன் தான் செல்கின்றனர்.  அதன்படி தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8வது சீசன் (Super Singer 8) இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சூப்பர் சிங்கர் 8 போட்டியில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் … Read more சூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு

என்னால் காமெடி வேடத்திலும் நடிக்க முடியும்: ரேகா

கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் அறிமுகமான ரேகா. அதன் பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அக்கா, அம்மா, அண்ணி போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். நேற்று வெளியான பேய்மாமா படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கடலோரக்கவிதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி மக்கள் வரவேற்று உற்சாகப் படுத்தினார்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே … Read more என்னால் காமெடி வேடத்திலும் நடிக்க முடியும்: ரேகா