சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 2 ஆண்டுகளாக 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர். மனநலம் பாதித்த மனைவி, 14 வயது மகள், 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 6 ஆம் வகுப்பிற்கு பின் பள்ளிக்கு செல்லாத … Read more சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்

கொரோனா பரவல் எதிரொலி: ரேஷன் கடைகளில் விரல்ரேகை வைக்க தயங்கும் பொதுமக்கள்

சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற உணவு பொருட்களும், மண்எண்ணெய் போன்றவையும் ரேஷன் கடைகளில் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குவதற்கு மாத தொடக்கத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கு வருவது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவி வரும் நிலையில் ரேஷன் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. அத்துடன் பொருட்கள் வாங்குபவர்கள் தங்கள் விரல் ரேகையை பயோமெட்ரிக் எந்திரத்தில் பதிவு செய்தால் … Read more கொரோனா பரவல் எதிரொலி: ரேஷன் கடைகளில் விரல்ரேகை வைக்க தயங்கும் பொதுமக்கள்

வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-க்கு உட்பட்ட பகுதியில் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி

வேளச்சேரி: வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-க்கு உட்பட்ட பகுதியில் நாளை மாலை வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை எடுத்துச் சென்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!

ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு! India oi-Mathivanan Maran By Mathivanan Maran | Published: Wednesday, April 14, 2021, 9:10 [IST] ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் … Read more ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி| Dinamalar

புதுடில்லி:”ஒருவரை கூட தவிர்க்காமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி எடுத்துள்ளது” என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று 50 நாடுகள் பங்கேற்கும் ‘ரெசினா மாநாடு’ துவங்கியது. கொரோனா காரணமாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த மாநாட்டில்வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்த உலகம் ‘வசுதேவ குடும்பம்’ என்ற ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் கொள்கை. உலகம் எப்படி இந்தியாவிற்கு முக்கியமோ அதுபோல உலகிற்கும் இந்தியா முக்கியமாக விளங்குகிறது.கொரோனாவுக்கு … Read more மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி| Dinamalar

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி, தமிழ் புத்தாண்டு இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கவர்னர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்நாளில் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். Best wishes on the special … Read more பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி மீண்டும் 14,400க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. முந்தைய அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட இந்திய சந்தையானது, இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தவிர இறுதி காலாண்டு அறிக்கைகள் எதிர்பார்ப்பும், … Read more சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி மீண்டும் 14,400க்கு அருகில் வர்த்தகம்..!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்: இன்னும் வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சற்று முன்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் அதேபோல் அவர் பெங்காலி, சிங்களவர்கள், நேபாளிகள் என அனைவரும் தங்களது புத்தாண்டை பல இனத்தவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அதிபரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த … Read more தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்: இன்னும் வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின்!

தமிழக மக்களுக்கு ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  இன்று முதல் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் … Read more தமிழக மக்களுக்கு ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து

புதுக்கோட்டை: `அமைச்சர் எதிர்வினைகளை அனுபவிப்பார்’ – நீக்கப்பட்ட அதிமுக-வினர் கொதிக்கும் பின்னணி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே உட்கட்சி பூசல் பூதாகரமாகி ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது. அறந்தாங்கி தொகுதியைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வேட்பாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் போராடிய நிலையில் ஒரு கட்டத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆலங்குடியில், போராட்டங்கள் ஓயவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இரண்டு மாதம் கூட ஆகாத தர்ம.தங்கவேலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் சிபாரிசால் மட்டுமே ஆலங்குடி வேட்பாளராக சீட் கிடைத்திருக்கிறது. ஆலங்குடிக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளரை மாற்ற … Read more புதுக்கோட்டை: `அமைச்சர் எதிர்வினைகளை அனுபவிப்பார்’ – நீக்கப்பட்ட அதிமுக-வினர் கொதிக்கும் பின்னணி!