திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் சுவாமிகளுக்கு பல வகையான அபிசஷகங்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வரும் 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஜேஷ்டாபிசேகம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்கள் […]