தியாகிகள் நினைவிடத்தில் சுவர் ஏறி குதித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக ஜம்மு காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வந்தது. அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை நாள் பட்டியலில் இருந்து இது நீக்கப்பட்டது. மேலும் தியாகிகள் கல்லறையில் … Read more

114 வயது மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் ஃபவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் … Read more

திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளை சேர்ந்த 75 மாநிலங்களவை எம்.பி.க்கள் 2026-ல் ஓய்வு

புதுடெல்லி: மாநிலங்​களவை எம்​.பி.க்​களுக்​கான தேர்​தல் அடுத்த ஆண்டு ஏப்​ரல், ஜூன் மற்​றும் நவம்​பர் ஆகிய 3 மாதங்​களில் நடை​பெற உள்​ளன. அடுத்த ஆண்டு நவம்​பருக்​குள் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த மூத்த தலை​வர்​கள் ஓய்வு பெற உள்​ளனர். அந்​தப் பட்​டியலில் காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, மதச்​சார்​பற்ற ஜனதா தள தலைவர் எச்​.டி.தேவக​வுடா ஆகியோ​ரும் உள்​ளனர். இவர்களது பதவிக்​காலம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. உ.பி. சார்​பில் அதி​கபட்​ச​மாக 10 எம்​.பி.க்​கள் அடுத்த ஆண்டு நவம்​பரில் ஓய்வு … Read more

பிரதமர், ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்தவரின் மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ஆட்சேபனைக்குரிய கார்ட்டூன்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில், கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியாவுக்கு கட்டாய கைது நடவடிக்கையில் இருந்து உச்ச நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிறரை புண்படுத்தும் விதமான பதிவுகளைப் பகிர்ந்தால், சட்டத்தின் கீழ் ஹேமந்த் மாளவியா மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சுதந்திரம் உள்ளது என்று நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அரவிந்த் குமார் அமர்வு எச்சரித்தது. மேலும், … Read more

கேரளாவில் 2 என்சிபி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: அஜித் பவார் தரப்பு கடிதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அஜித் பவார் தலைமையிலான என்சிபி-யின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் கடிதம் அனுப்பியுள்ளார். கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மற்றும் கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாமஸ் கே.தாமஸ் ஆகிய இரண்டு என்சிபி எம்எல்ஏக்கள் தற்போது சரத் பவார் தலைமையிலான கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சி இப்போது கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக … Read more

ஒடிசா மாணவி உயிரிழந்த விவகாரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்த யுஜிசி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யுஜிசி) அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு புதுடெல்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்குமார் மிட்டல் தலைமை வகிப்பார் என யுஜிசி தெரிவித்துள்ளது. முன்னாள் யுஜிசி உறுப்பினர் சுஷ்மா யாதவ் … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது 2022, டிசம்பர் 16 அன்று, இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்துப் பேசினார். “இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது மக்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி கேட்பார்கள். ஆனால், இந்திய படைகளை சீன படை தாக்கியது குறித்து ஒருமுறை கூட … Read more

பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் … Read more

திருமணம் தொடர்பான வழக்குகளில் கணவன் – மனைவிக்கு இடையில் உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும் ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான ஒரு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனைவி தன்னை சித்​ர​வதை செய்​வ​தாக கணவன் குற்​றம் சாட்​டி​னார். அதற்கு ஆதா​ர​மாக தொலைபேசி​யில் மனைவி பேசிய அனைத்​தை​யும் ரகசி​ய​மாக பதிவு செய்து அதை டிஸ்க்​கில் பதிவேற்​றம் செய்து சமர்ப்​பித்​தார். அந்த தொலைபேசி உரையாடல்​களை குடும்​பநல நீதி​மன்​றம் ஆதா​ர​மாக … Read more

நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தம்! கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்! சாத்தியமானது எப்படி?

Nimisha Priya Execution Postponed : கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு இரு தினங்களில் மரண தண்டனை விதிக்க இருந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் மத்திய அரசு போராடியும் நடக்காத விஷயம், தற்போது நடந்தது எப்படி?