டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை: காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 28 தொகுதிகளில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு நெருக்கமான நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உட்பட 16 இடங்களில் … Read more

2-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா … Read more

அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலை-33 இல் ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான பகுதி சேதமடைந்துள்ளது. … Read more

“என்னை தினமும் வசைபாடி மகிழ்கிறார் ராகுல் காந்தி” – பிரதமர் மோடி

மொரேனா: “என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் மீது மக்கள் கோபப்பட வேண்டாம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரேனா பகுதியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார். என்னைத் திட்டுவதை அவர் ரசிக்கிறார். தினமும் என்னைப் பற்றி எதையாவது பேசுகிறார். நாட்டின் பிரதமரை பேசுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் … Read more

பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

ஹைதராபாத்: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை அன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தது. “இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் நாட்டவர்கள் சூரத் நகரில் தான் தொழில் தொடங்கினர். அதே பாணியில் சூரத்திலிருந்து தொடங்கி நாட்டை கைப்பற்றினர் பிரதமர் மோடியும், அமித் ஷாவும். அதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியில் … Read more

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் ராகுல் முதல் ஹேமமாலினி வரை – 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளில் நாளை (ஏப்.26) 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், நாளை 2-ஆம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு? … Read more

காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா… உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..!

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சொத்துகள் மறுபங்கீடு கொள்கை  இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.25: இரண்டாம் கட்ட தேர்தல் முதல் மோடிக்கு கார்கே கடிதம் வரை

89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை 2-ம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கேரள மாநிலம் வயநாட்டில் … Read more

யார் வசம் வயநாடு? தொடருமா ராகுல் மேஜிக்? நாளை வாக்குப்பதிவு!!

Lok Sabha Elections: வயநாட்டில் இம்முறை நிலவும் மும்முனைப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய எம்பி ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் கடுமையான போட்டி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

“இந்திரா காந்தியின் சொத்துகளை காக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்தார்” – பிரதமர் மோடி

மொரீனா (மத்தியப் பிரதேசம்): “கடந்த 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த பின்னர் தனது பரம்பரைச் சொத்துகள் யாவும் அரசுக்குச் செல்லாமல் இருக்கவே, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார்” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் தற்போது பரம்பரை சொத்து வரியை திரும்பக் கொண்டுவர முயற்சிக்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார். மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரீனாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் … Read more