“காங். தலைவர்கள் தங்களை ராமரை விட மேலானவர்களாக கருதுகின்றனர்” – பிரதமர் மோடி @ சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்: “ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமரை விடவும் மேலானவர்களாக கருதுகிறார்கள். ஏழைகள், பெண்கள், விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை” என்று பிரதமர் மோடி பேசினார். சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர் – சம்பாவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியது: “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமருக்கு மேலாகக் கருதுகின்றனர். காங்கிரஸ்காரர்கள் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கான அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மதத்தின் … Read more

“அபிஷேக் பானர்ஜியை சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி…” – பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: “கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டை உளவு பார்த்த அந்த நபரைச் சந்திக்க அபிஷேக் பானர்ஜி அன்று சம்மதித்திருந்தால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “பாஜகவில் உள்ள துரோகி ஒருவர் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டியிருந்தார். உங்களுக்கு என் மீது வெறுப்பு இருந்தால் என்னை வெடிகுண்டு வீசிக் கொல்லுங்கள். நீங்கள் அபிஷேக்கை … Read more

பாஜகவின் ‘பி டீம்’தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி: டேனிஷ் அலி எம்.பி பேட்டி

புதுடெல்லி: “இண்டியா கூட்டணியில் இணையாது விலகியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது. இதன்மூலம், பாஜகவின் ‘பி டீம்’ ஆக பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுவது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது” என்கிறார் அம்ரோஹா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டேனிஷ் அலி. டேனிஷ் அலி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின்போது மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் … Read more

கேஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 15 ஆம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் முதல்வர் … Read more

வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள்

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். 

“ப.சிதம்பரம் எண்ணம் ஒருபோதும் பலிக்காது” – சிஏஏ விவகாரத்தில் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: “தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால், ப.சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்’ என்று கூறினார். இது தொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “1960-களில் இருந்தே தேர்தலில் … Read more

பாகஜவின் சூரத் வெற்றி… கடந்த கால தேர்தல்களில் வென்றவர்கள் எத்தனை பேர்?

நாட்டின் தற்போதைய 18வது லோக்சபா தேர்தலில் பாஜக முதல் வெற்றியை குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பெற்றுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது” – கேஜ்ரிவால் விவகாரத்தில் திஹார் சிறை அதிகாரி விளக்கம்

புதுடெல்லி: திஹார் சிறை நிர்வாகம் மீது கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்த நிலையில், “அனைத்து கைதிகளுக்கும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் இதைப் பற்றி பேசினால், இந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்” என திஹார் சிறைத் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரான கேஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திஹார் சிறையில் உள்ள தனது கணவரைக் கொலை செய்ய சதி நடக்கிறது. அவர் உண்ணும் ஒவ்வொரு … Read more

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?

Latest News Punjab Birthday Cake Death Reason : பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த இறப்பிற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் புகைப்படம் @ தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் பாஜக தொண்டர் திருமண பத்திரிகையில் தனது தொகுதி பாஜக வேட்பாளர் புகைப்படத்தை அச்சிட்டு விநியோகம் செய் துள்ளார். தெலங்கானாவில் மே 13-ம் தேதி 17 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், மேதக் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ரகுநந்தன் ராவ் களம் இறங்கி உள்ளார். இவரது ஆதரவாளர்களில் ஒருவரான சுரேஷ் நாயக்கின் தம்பியின் திருமணம் வரும் 28-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் … Read more