ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

அபுதாபி, ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  எனினும், சென்னை அணியில், பிராவோவுக்கு பதிலாக சாம் கர்ரன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இன்று தான் ரியல் சண்டே(டை)! IPL 2021 முக்கியமான இரண்டு போட்டிகள்!

இன்றைய ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான நான்கு அணிகளுக்கு இடையே போட்டி நடக்க உள்ளது.  இதனால் இன்றைய போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.  இன்று வார இறுதி நாள் என்பதால் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன.  பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இரவு 7.30க்கு ஆசிபி vs மும்பை அணிகள் மோதவுள்ளன.  சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி … Read more இன்று தான் ரியல் சண்டே(டை)! IPL 2021 முக்கியமான இரண்டு போட்டிகள்!

சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?

கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட சென்னை அணி இந்த சீசனில் நன்கு எழுச்சி பெற்று இருக்கிறது. குறிப்பாக 2-வது கட்ட சீசனில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை அடுத்தடுத்து போட்டுத்தாக்கியதால் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக தென்படும் சென்னை அணியின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தால் ஏறக்குறைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விடும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 … Read more சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா?

சிக்கலில் சஞ்சு சாம்சன்; வறுத்தெடுக்கும் BCCI

புதுடெல்லி: ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் டெல்லி (Delhi Capitals) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ராஜஸ்தான் (Rajasthan … Read more சிக்கலில் சஞ்சு சாம்சன்; வறுத்தெடுக்கும் BCCI

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

கொல்கத்தா, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து உதைவாங்கியதால் தடுமாறிப்போன பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ளது. அதிரடி வீரர்கள் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் முந்தைய 2 ஆட்டங்களிலும் ஜொலிக்கவில்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் பார்முக்கு திரும்பினால், பெங்களூரு வலுவடையும். அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 7 தோல்விகளை (கடந்த ஆண்டு போட்டியையும் சேர்த்து) சந்தித்துள்ள பெங்களூரு அணி தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 4 வெற்றி, 5 தோல்விகளுடன் … Read more வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

உலக வில்வித்தை: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்

இதில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 150-154 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ்-சாரா இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.

செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சியாவை 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டி வென்றது. லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக கேப்ரியல் ஜீசஸ் 53-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். சக வீரா் கேன்சலோ 30 யாா்டு தூரத்திலிருந்து பந்தை கோல் போஸ்டுக்குள் உதைக்க முயல, அது செல்சி வீரரால்தடுக்கப்பட்டு திரும்பியது. அதை கேப்ரியல் தனது வசப்படுத்தி மீண்டும் கோல் போஸ்டுக்குள் தள்ளினாா். சாதனை: பயிற்சியாளா் பெப் குவாா்டியோலா கண்காணிப்பின் கீழ் மான்செஸ்டா் சிட்டி … Read more செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தாய்லாந்து, போட்டியை நடத்தும் பின்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கிறன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு போட்டியும் 2 ஒற்றையர், 3 இரட்டையர் … Read more சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்

மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

 ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒன் டே கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்டது. தொடரை முற்றிலுமாக இழக்காமல் ஆறுதல் வெற்றி அடையும் முனைப்பில் இந்தியா 3-ஆவது ஆட்டத்தில் களம் காண்கிறது. வெற்றியை சுவைக்க இந்திய அணியின் பௌலா்கள் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். ஜுலன் கோஸ்வாமியைத் தவிர வேறு பௌலா்கள் சோபிக்கவில்லை. ஷிகா பாண்டே, … Read more மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி

இதன் பெண்கள் இரட்டையர் அரைஇறுதி சுற்றில் சானியா மிர்சா (இந்தியா)-சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோஜூமி-நினோமியா இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆண்டில் முதல் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள சானியா இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கைட்லின் கிறிஸ்டியன் (அமெரிக்கா)-எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) இணையுடன் மோதுகிறார்.