உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசம் – இலங்கை, ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா – இங்கிலாந்து ஆகிய டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி … Read more

சஞ்சு சாம்சனுக்காக அதிரடி பேட்டரை விடுகிறதா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் 2025ல் மிகவும் மோசமாக விளையாடியது. முதல் அணியாக தொடரைவிட்டு வெளியேறியது. இதனால் வரக்தியடைந்த ரசிகர்கள், கடுமையாக சாடியும் வந்தனர். பந்து வீச்சு சரியில்லை, பேட்டிங் சரியில்லை என்று. இச்சூழலில், ஐபிஎல் 2025 தொடரின் இறுதி கட்டத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணையப்போவதாக கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இந்த தகவல் … Read more

அவரது பேட்டிங்கை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூட ரசிக்கிறார் – மைக்கேல் வாகன் பாராட்டு

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது. பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி … Read more

ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்

புதுடெல்லி, ஈட்டி எறிதலில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431 புள்ளிகளுடன் கிரெனேடியாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 1370 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் வீரர்கள் சதம் அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்து அபார … Read more

2-வது டெஸ்ட்: வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை

கொழும்பு, வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன்னில் அடங்கியது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 458 ரன்கள் குவித்து ஆல்-அவுட் … Read more

இங்கிலாந்தை வீழ்த்த கில்லுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு இந்த பிளேயர் தான் – ரஹானே

Ajinkya Rahane, India vs England Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்கிறனர். முதல் டெஸ்ட் போட்டியின்போது பந்துவீச்சில் சரியான திட்டமிடல் இல்லை, பீல்டிங் படுமோசம், பவுலிங் ரொட்டேசன் சரியில்லை என வறுத்து எடுக்கின்றனர். இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் லுகா நார்டியுடன் மோதும் நம்பர் 1 வீரர்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நாளை மறுதினம் லண்டனில் தொடங்குகிறது. ஜூலை 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடரில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் 1’ வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர் தனது முதல் சுற்றில் சக நாட்டவரான லுகா நார்டியை சந்திக்கிறார். முன்னணி வீரரான … Read more

ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?

துபாய், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே … Read more

அரசு பணியில் சேர்ந்த ரிங்கு சிங்! இனி கிரிக்கெட் விளையாட மாட்டாரா?

Rinku Singh Basic Education Officer: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் அவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடிப்படை கல்வி அதிகாரியாக (Basic Education Officer) நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்பி பிரியா சரோஜனுடன் ரிங்கு சிங்கிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது, நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த … Read more