IND vs ENG: கம்பீர் தலையின் மேல் தொங்கும் கத்தி? 2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்!

India tour of England: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 835 ரன்கள் உட்பட ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் வரும் ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சுப்மாம் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிர ஆலோசனை … Read more

இந்திய அணி இந்த 3 விஷயங்களை செய்தாலே 'வெற்றி' உறுதி… செய்யுமா கில் படை?

India vs England: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson – Tendulkar Trophy) மீது கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது எனலாம். டெஸ்டில் அதிரடி பாணியை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணியுடன், இளமையான மற்றும் திறமையான இந்திய அணி மோதும் இந்த டெஸ்ட் தொடர்தான் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி (Team England) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும் … Read more

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்… சர்ச்சையில் சிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பாலியன் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கிரிக்கெட் வீரர் கயானாவை சேர்ந்தவர் என்றும் தற்போதைய தேசிய அமைப்போடு தொடர்புடைவர் என கூறப்படுகிறது. 11 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வாய் திறக்கவில்லை.  இந்த 11 பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர்கள் அந்த வீரரால், பாலியல் வன்கொடுமைக்கு … Read more

2-வது டெஸ்ட்: இந்திய அணி ஒரு மாற்றம் செய்தால் போதும் இங்கிலாந்தை வீழ்த்தலாம்- ஆஸி.முன்னாள் கேப்டன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த … Read more

ICC New Rules: டி20 கிரிக்கெட்டில் புதிய விதி.. ஐசிசி அதிரடி!

நவீன கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைப்பது டி20 கிரிக்கெட் போட்டிகள் தான். இதற்குதான் தற்போது அதிக ரசிகர்கள் உள்ளனர். டி10 போட்டிகளும் அங்காங்கே நடந்து வருகிறது. இந்த வடிவில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருப்பதால், இதற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.  20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில், முதல் 6 ஓவர்கள் பவர் பிளே ஆக இருக்கிறது. இது ஒரு அணியின் வெற்றிக்கு … Read more

இது ஒன்றும் ஐ.பி.எல்.கிடையாது… தயவுசெய்து அதை செய்யாதீர்கள் – ரிஷப் பண்டுக்கு அஸ்வின் வேண்டுகோள்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது. பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி … Read more

பும்ராவை மட்டும் நம்ப முடியாது… இந்திய அணியில் 'சிஎஸ்கே' பௌலர் – பக்கா பிளான் ரெடி!

India vs England Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 24ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.  ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy Series) இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஓவல் மைதானங்களில் அடுத்தடுத்து … Read more

சர்வதேச கிரிக்கெட்: புதிய விதிமுறைகள் அறிமுகம்.. ஐ.சி.சி. அதிரடி முடிவு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதுபோக சில விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.சி.சி.-ன் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.பந்தின் மீது சலிவா பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் பந்தின் மீது சலிவா பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் பந்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காக சில … Read more

2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!

2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்றது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், 2024 உலகக் கோப்பையை வென்றது குறித்து ரோகித் சர்மா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். குறிப்பாக, அவர் இறுதி போட்டியின் வெற்றி குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.  ரோகித் சர்மா பேசியதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான … Read more

ஜெய்ஸ்வால் ஏன் கேட்சுகளை தவறவிட்டார்..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

லீட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. … Read more