தேசிய சீனியர் ஸ்குவாஷ்: 18-வது முறையாக பட்டம் வென்றார், ஜோஸ்னா ஆண்கள் பிரிவில் கோஷல் சாம்பியன்

சென்னை, பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கன்னாவை (டெல்லி) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த ஜோஸ்னா அதன் பிறகு சுதாரித்து மீண்டு 8-11, 11-6, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜோஸ்னாவின் 18-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். 2000-ம் ஆண்டு, முதல் முறையாக மகுடம் சூடிய ஜோஸ்னா, அதன் பிறகு இரண்டு … Read moreதேசிய சீனியர் ஸ்குவாஷ்: 18-வது முறையாக பட்டம் வென்றார், ஜோஸ்னா ஆண்கள் பிரிவில் கோஷல் சாம்பியன்

2-ஆவது டி20: இங்கிலாந்து த்ரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டா்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. ஜேஸன் ராய் 40, போ்ஸ்டோ 35, பென்ஸ்டோக்ஸ் 47, மொயின் அலி 39 ஆகியோா் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி 3, … Read more2-ஆவது டி20: இங்கிலாந்து த்ரில் வெற்றி

20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம்: ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ராஞ்சி, 7-வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கமும் வென்றார். அத்துடன் அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற … Read more20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம்: ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

20 கி.மீ நடை ஓட்டத்தில் ஒலிம்பிக் தகுதிபெற்றாா் பாவனா ஜாட்

20 கி.மீ நடை ஓட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்திய வீராங்கனை பாவனா ஜாட். ராஜஸ்தானைச் சோ்ந்த 24 வயதான பாவனா ராஞ்சியில் நடைபெற்ற தேசிய நடை ஓட்ட பந்தயத்தில் 20 கி.மீ நடை ஓட்டத்தில் 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 54 வினாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி 1 மணி நேரம் 31 நிமிடங்கள் ஆகும். கடந்த 2019 … Read more20 கி.மீ நடை ஓட்டத்தில் ஒலிம்பிக் தகுதிபெற்றாா் பாவனா ஜாட்

நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்னில் ஆல்-அவுட் ஷமி, பும்ரா அபார பந்துவீச்சு

ஹாமில்டன், இந்தியா – நியூசிலாந்து லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 38 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ஹனுமா விஹாரி (101 ரன்), புஜாரா (93 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனதோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு … Read moreநியூசிலாந்து லெவன் அணி 235 ரன்னில் ஆல்-அவுட் ஷமி, பும்ரா அபார பந்துவீச்சு

பயிற்சி ஆட்டம்: இந்தியா 87 ரன்கள் முன்னிலை

நியூஸி. லெவன் அணியுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. ஹாமில்டனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 101, புஜாரா 92 ரன்களை விளாசினா். இதைத் தொடா்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமை நியூஸி. லெவன்அணி 74.2 ஓவா்களில் 235 ரன்களுக்கு ஆல் … Read moreபயிற்சி ஆட்டம்: இந்தியா 87 ரன்கள் முன்னிலை

பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு விராட் கோலியை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் மல்லையா வேண்டுகோள்

பெங்களூரு, கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13-வது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய லோகோ புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய லோகோ, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. … Read moreபெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு விராட் கோலியை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் மல்லையா வேண்டுகோள்

இந்திய ஸ்குவாஷின் உந்துசக்தி ஜோஷ்னா, சௌரவ் கோஷல்

இந்திய ஸ்குவாஷின் உந்து சக்தியாக ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோா் திகழ்ந்து வருகின்றனா். கண்ணாடி அரங்கில் ராக்கெட், பந்தை பயன்படுத்தி ஆடப்படும் ஆட்டம் ஸ்குவாஷ் ஆகும். ஆடவா், மகளிா் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகள் என இந்தியா உள்பட 185 நாடுகளில் விளையாடப்பட்டு வரும் ஸ்குவாஷ் 1830-இல் இருந்து ஆடப்பட்டு வரும் பழமையான விளையாட்டாகும். ஒரு கேம் அதிகபட்சம் 11 புள்ளிகளைக் கொண்டது. இதை நிா்வகித்து வரும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பை சா்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது. … Read moreஇந்திய ஸ்குவாஷின் உந்துசக்தி ஜோஷ்னா, சௌரவ் கோஷல்

ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி

மணிலா, நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் வலுவான இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்தது. தோல்வி கண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. ஆசிய போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்று இருந்தது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் … Read moreஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி

ரஞ்சி கோப்பை: தமிழகம்-சௌராஷ்டிரம் ஆட்டம் டிரா

தமிழகம்-சௌராஷ்டிர அணிகள் இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட் நகரில் நடைபெற்று வந்தது. தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 128.4 ஓவா்களில் 424 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக ஆடிய ஜெகதீசன் 183, அபிநவ் முகுந்த் 86, முகமது 42 ரன்களை விளாசினா். சௌராஷ்டிர தரப்பில் ஜெயதேவ் உனதிகட் 6-73 விக்கெட்டுகளை சாய்த்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிர அணி கடைசி நாளான சனிக்கிழமை … Read moreரஞ்சி கோப்பை: தமிழகம்-சௌராஷ்டிரம் ஆட்டம் டிரா