''தேர்தல் விதிகளை அப்பட்டமாக மீறுகிறார் பிரதமர் மோடி'' – முத்தரசன் கண்டனம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தங்கள் கட்சியின் வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒன்றிய அரசின் தவறான கொள்கையினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இயங்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தமான … Read more

வடக்கு, மேற்கில் அதிக தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு தெற்கு, மத்திய தொகுதிகள்!

கடந்த முறை மக்களவைத் தேர்தலில், திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, ஐஜேகே, கொமதேக கட்சிகளின் உறுப்பினர்கள் 4 பேர் திமுக சின்னத்தில் நின்றனர். இந்த தேர்தலில், பாஜக கூட்டணிக்கு ஐஜேகே சென்றுவிட்டது. இதையடுத்து, திமுக 21 தொகுதிகளிலும், மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே, மக்களவை தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டது திமுக. இந்த தேர்தலை பொருத்தவரை, அதிமுக, பாஜக இரு கட்சிகளும் … Read more

TN Lok Sabha Elections 2024 : தமிழக ஆந்திர எல்லையில் 3.84 லட்சம் பணம் பறிமுதல்

TN Lok Sabha Elections 2024 : வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் தீவிரம் காட்டும் பறக்கும் படையினர்.

“மோடியின் நல்லாட்சி தொடரவே பாஜகவுடன் பாமக கூட்டணி” – அன்புமணி விளக்கம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 19) பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய … Read more

தேர்தல் பறக்கும் படை சோதனை! 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது கிட்டத்தட்ட 2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும், புதிது, புதிதாக நிர்வாகிகளை நியமித்தும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவர் … Read more

பண பட்டுவாடா புகார் அளிக்க வருமானவரி துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக வருமான வரித் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை சார்பில் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியிலாவது வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடந்தால், அதுபற்றிய தகவல்கள், புகார்களை பொதுமக்கள், அரசியல் … Read more

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு: மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு … Read more

நெல்லை தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக களம் காணும் காங்கிரஸ்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் நேரடியாக களம் காணுகிறது. திருநெல்வேலி தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் 5 முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1952, 1957 தேர்தல்களில் பெ.தி.தாணுப்பிள்ளையும், 1962-ல் முத்தையாவும், 2004-ல் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தனும், 2009-ல் எஸ்.எஸ். ராமசுப்புவும் வெற்றி பெற்றுள்ளனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் … Read more