கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரில் 5 சுயேச்சைகள் போட்டி

கோவை: கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் உட்பட 59 மனுக்கள் ஏற்கப்பட்டன. கோவை தொகுதியில் ராஜ்குமார் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் … Read more

’மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்’ தாராபுரத்தில் கனிமொழி சொன்ன அந்த பாயிண்ட்!

Kanimozhi: தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, ஏழைகளை சுரண்டி அதானி, அம்பானிகளை பிரதமர் நரேந்திர மோடி வளர்த்துக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பரிதாபம்: கேளிக்கை விடுதி கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. நேற்று இரவு இந்த விடுதியில் ஏராளமானோர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் … Read more

அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடி உண்மையா? அவரே கொடுத்த விளக்கம்

Annamalai: அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி என அதிமுக, திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

39 தொகுதிகளிலும் மனுக்கள் பரிசீலனை முடிந்தது: தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிமாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73,வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று காலை 11 மணி முதல் அந்தந்த தொகுதி பொது … Read more

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பரிதாப உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்; வைகோ அஞ்சலி

ஈரோடு/ சென்னை: விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 77. ஈரோடு எம்.பி.யான அ.கணேசமூர்த்தி, ஈரோடு பெரியார் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். இவருக்கு கபிலன் என்ற மகன், தமிழ்பிரியா என்ற மகள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை … Read more

யுஎஸ் Vs இந்தியா கருத்து மோதல் முதல் நிர்மலா சீதாராமன் சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 28, 2024 

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதனிடையே, 2024-25 நிதி ஆண்டில் 100 நாள் … Read more

“5 ஆண்டுகள் சும்மாவே இருந்ததால் சு.வெ என்று அழைப்பு” – மதுரை அதிமுக வேட்பாளர் கிண்டல்

மதுரை: ‘‘மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடசேன், கடந்த ஐந்து ஆண்டு காலம் சும்மாவே இருந்ததால் மக்கள் தற்போது சு.வெ என்று அழைக்கிறார்கள்’’ என்று அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் கிண்டல் செய்து பேசினார். மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து இன்று இரவு அக்கட்சிப் பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி ஆதரித்து பிரச்சாரம் செய்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, அமைப்பு செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், விவி.ராஜன் செல்லப்பா, … Read more

சென்னை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து – நடந்தது என்ன?

சென்னை: சென்னை – ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த செக்மேட் பார் என்ற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை வியாழக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். விபத்து நடந்தது எப்படி? – “வியாழக்கிழமை மாலை 7.15 மணி அளவில் அவசர அழைப்பு வந்தது. அதில் செக்மேட் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து … Read more

சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் ஷெக்மேட் என்ற தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் மற்கூரை, வியாழக்கிழமை இரவு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் … Read more