“ஜெயித்தால் என் இதயம் நின்று விடும்!” – ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் பேட்டி

தருமபுரி: அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் எப்படி இருக்கும் என கேட்டதற்கு எனது இதயம் நின்று விடும் என, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதிக்கு முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்த பத்மராஜன் `இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: 1988 முதல் 238 தேர்தல்களில் மனு தாக்கல் … Read more

சவாலான தொகுதி… முதல்வரின் துணிச்சலான முடிவு: தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகழாரம்

Lok Sabha Elections: கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார்.

“பாமக வேட்பாளர்களில் 30% மகளிர், 20% பட்டியலினத்தோர்; இதுதான் சமூகநீதி” – ராமதாஸ்

சென்னை: பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) … Read more

பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்… இது தான் சமூகநீதி!

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

“தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும்” – அண்ணாமலை

கோவை: “தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக தமிழக தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜகவேட்பாளருமான அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். கோவை மக்கள் அடுத்த 40 நாட்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு பணமழை பொழியும். இலவசங்கள் … Read more

தஞ்சையில் வாக்கிங் சென்றபோது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ, … Read more

தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் – திமுக

பாஜகவின் பணபலத்தையும் அதிகார பலத்தையும் முறியடிக்கும் சாரதியாக முதல்வர் திகழ்கிறார் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்ராயன் விமர்சனம் செய்துள்ளார்.  

சென்னையில் 3 தொகுதிகளுக்கான 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே. நகர், ராயபுரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக அபிஜித்அதிகாரி (94459 10931) நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ஜி.ஏ. ஹரஹானந்த் (94459 10932) நியமிக்கப் … Read more

பிரதமர் மோடி இதற்காகத்தான் அடிக்கடி தமிழகம் வருகிறார் – அண்ணாமலை சொன்ன பதில்!

BJP Annamalai: 2026 தேர்தலின் போது பெட்ரோல், டீசல் இலவசம் என்று திமுக சொன்னாலும் சொல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.  

பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.6.7 லட்சம் பணத்துடன் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னை: வருமானவரித் துறையினர் கொண்டு சென்ற 6.7 லட்சம் ரூபாயைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனசோதனையில் … Read more