முதன்முதலாக வீரர்கள் இன்றி வீராங்கனைகள் மட்டுமே விண்வெளியில் நடைப்பயணம்

வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்துக்குள் தங்கியுள்ள வீரர்கள், வீராங்கனைகள், நிலையத்துக்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்தபடி பராமரிப்பு பணிகளை கவனிப்பது வழக்கம். வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டனரே தவிர, இதுவரை வீராங்கனைகள் மட்டுமே தனித்து நடைப்பயணம் மேற்கொண்டது இல்லை. இந்தநிலையில், முதன்முதலாக அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மெயிரும் சர்வதேச விண்வெளி … Read moreமுதன்முதலாக வீரர்கள் இன்றி வீராங்கனைகள் மட்டுமே விண்வெளியில் நடைப்பயணம்

ரோட் தீவில் கோலாகலம் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலரை மணந்தார்

வாஷிங்டன்,  குக் மரோனி என்ற கலைப்பொருள் வியாபாரியை ஜெனிபர் லாரன்ஸ் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். இது தொடர்பாக ஹாலிவுட் பட உலகில் கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஒரு கட்டத்தில் ஜெனிபர், தன் காதலர் குக் மரோனியை நியூயார்க் நகரில் திருமணம் செய்து கொண்டதாகவெல்லாம் தகவல்கள் வெளி வந்தன. இந்த நிலையில், ஜெனிபர் லாரன்ஸ், குக் மரோனி மணவிழா அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள நியூபோர்ட் நகரில் 19-ந் … Read moreரோட் தீவில் கோலாகலம் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலரை மணந்தார்

'வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும்' – ஐ.நா.வில் சீனாவை விளாசிய ட்ரம்ப்!!…

United Nations:  சீனாவின் வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும், இனி அதற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஐ.நா.சபையில் பேசியுள்ளார்.  வல்லரசு நாடுகளான அமெரிக்கா – சீனா இடையே, வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அரசு கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்தது.  இரு நாடுகளும் போட்டி போட்டுக் … Read more'வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும்' – ஐ.நா.வில் சீனாவை விளாசிய ட்ரம்ப்!!…

மோட்டோர் ஜிபி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயம்…

ஜப்பானில் நடைபெற்ற மோடோ ஜிபி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் மார்க் மார்குயிஸ் ஒரு நிமிடம் 45 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றிப்பெற்றார். ஜப்பான் நாட்டின் மோடெகி  நகரில் கிராண்ட் பிக்ஸ் எனப்படும் மோடோ ஜிபி மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறு முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் மார்க் மார்குயிஸ், தனக்கு நெருக்கடி கொடுத்த இத்தாலி வீரர் ஃப்ரான்சோ மார்பிடெல்லி மற்றும் பிரான்ஸ் வீரர் ஃபேபியோ … Read moreமோட்டோர் ஜிபி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயம்…

பிரெக்சிட் தீர்மானம் பிரிட்டனில் நிராகரிப்பு

லண்டன், ‘பிரெக்சிட்’ எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பார்லி நிராகரித்தது. இதற்காக நடைபெற்ற ஓட்டெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் ஓட்டளித்தனர்.ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்., 31க்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் … Read moreபிரெக்சிட் தீர்மானம் பிரிட்டனில் நிராகரிப்பு

விண்வெளியில் நடந்து சாதனை படைத்த 2 பெண்கள் ; டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன், அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். ஆண்கள் இன்றி இரு பெண்கள் மட்டும் தனியாக விண்வெளியில் நடந்து, பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது, இதுவே முதன் முறையாகும். இதன்மூலம், உலக விண்வெளி ஆய்வு வரலாற்றில், இரு வீராங்கனைகளும் புதிய சாதனையை நிகழ்த்தி செய்துள்ளனர். இரு விண்வெளி வீராங்கனைகளின் இந்த சாதனைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தார்.

“மோடி மீது அழுத்தம் இல்லை…”- Kashmir விவகாரத்தில் புலம்பி தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் Imran Khan!…

New York:  காஷ்மீர் (Kashmir) விவகாரத்தில் சர்வதேச கவனத்தைக் குவிக்க தவறிவிட்டதாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan), சர்வதேச நாடுகள் அந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.  ஆகஸ்ட் மாதம் ஜம்மூ காஷ்மீருக்கு (Jammu and Kashmir) அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ (Article 370) ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது இந்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து … Read more“மோடி மீது அழுத்தம் இல்லை…”- Kashmir விவகாரத்தில் புலம்பி தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் Imran Khan!…

40 ஆண்டுகளாக சிவப்பு நிறத்துக்கு மத்தியில் வாழும் பெண்…

போஸ்னியாவை சேர்ந்த 67 வயதாகும் பெண் ஒருவர், 40 ஆண்டுகளாக சிவப்பு நிற உடைகளை அணிவதுடன், அதேநிறத்திலான பொருள்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்.  ஜோரிகா ரெபர்நிக் ((Zorica Rebernik)) என்ற அந்தப் பெண், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட வீட்டில் சிறப்பு நிற காலணி, இருக்கை, மேஜைகள் உள்ளிட்ட சிவப்பு நிற பொருள்களுக்கு மத்தியில் கணவர் ஜோரனுடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் சிவப்பு நிற பிளேட்டுகளில் உணவு சாப்பிடுவதுடன், நீர் அருந்துவதற்கு சிவப்பு … Read more40 ஆண்டுகளாக சிவப்பு நிறத்துக்கு மத்தியில் வாழும் பெண்…

‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்

பெய்ரூட்: லெபனான் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு அரசு, வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க அதிரடியாக முடிவு செய்தது. ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (சுமார் ரூ.14) வரி விதிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இதைக் கேட்டதும் அந்த நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி அரசாங்கம் … Read more‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்

பாக்.,கில் எதிர்க்கட்சிகள் பேரணி ராணுவத்துக்கு அரசு அழைப்பு?

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதை முறியடிக்க ராணுவத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு ஊழலில் ஈடுபடுவதாக கூறி அக்.31ல் இஸ்லாமாபாதில் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.ஜமாத் உலமா இஸ்லாம் கட்சியின் தலைவர் மவுலான பசல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளன.இதனால் ஏற்படும் சட்டம் – … Read moreபாக்.,கில் எதிர்க்கட்சிகள் பேரணி ராணுவத்துக்கு அரசு அழைப்பு?