சூர்யா
நடிப்பில் கடைசியாக வெளியான
சூரரைப்போற்று
மற்றும் ஜெய் பீம் OTT யில் சக்கைபோடுபோட்டது. இதைத்தொடர்ந்து
பாண்டிராஜ்
இயக்கத்தில் தற்போது
எதற்கும் துணிந்தவன்
படத்தில் நடித்துமுடித்துள்ளார் சூர்யா. இப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து இப்படத்தைப்பற்றி இயக்குனர் பாண்டிராஜ் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். முதலில் இக்கதையை பாண்டிராஜ் நடிகர் சூர்யாவுக்காக எழுதவில்லையாம். வேறொரு ஹீரோவுக்காகத்தான் எழுதினாராம். எனவே இக்கதையை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் இதற்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என தெரிவித்தார்.
பாண்டிராஜும் சற்று யோசித்துவிட்டு பிறகு சூர்யாவை அணுகலாம் என்று நினைத்து அவரை அணுகியுள்ளார். சூர்யாவிற்கு இக்கதை மிகவும் பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் இதற்கு முன் நடிகர் சூர்யாவிற்காக ஒரு மிக பெரிய பட்ஜெட்ல ஒரு கதை எழுதியுள்ளாராம் பாண்டிராஜ்.
யாரை கேட்டு இந்த ஏற்பாடு செய்தீர்கள் : தனுஷ் காட்டம்
அக்கதையை தற்போது படமாக்க வேண்டுமென்றால் நிறைய காலமும் பட்ஜெட்டும் தேவைப்படும் அதனால் பிறகு அப்படத்தை எடுத்துக்கொள்ளலாம் என அக்கதையை வைத்திருக்கிறாராம். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதையை இவர் சிம்புவிற்காக எழுதியுள்ளார். ஆனால் அப்போது
சிம்பு
வேறொரு படத்தில் கமிட்டாகி இருந்ததால் அவரால் இப்படத்தில் நடிக முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட சிம்பு ரசிகர்கள் நம்ப ஹீரோ எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தால் மாநாடு படத்திற்கு பிறகு மாஸான சம்பவத்தை பாத்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கிராமத்து பின்னணியில் மாஸாக உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.தற்போது மீண்டும் மார்ச் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் துன்று அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் சார் தான் முதல் வாய்ப்பு கொடுத்தார் – புகழ் பெருமிதம்!