சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு.. தடுமாறும் தங்கம் விலை .. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1852 டாலர்களை தொட்ட நிலையில், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. மாறாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது.

குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது.

பேங்க் ஆப் இங்கிலாந்து

பேங்க் ஆப் இங்கிலாந்து கடந்த வாரத்தில் வட்டி விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், அதுவும் தங்கத்தின் விலையில் எதிரொலித்தது. அதே சமயம் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 90 டாலர்களையும் எட்டியது. இதன் காரணமாக தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கும் மேலாக இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலையும்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், தொடர்ந்து ஏற்றத்தினை காணலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தான் நடப்பு வாரத்தின் முடிவில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்துள்ளது.

டாலர் மதிப்பு
 

டாலர் மதிப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டலாம். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தி குறைப்பா?

எண்ணெய் உற்பத்தி குறைப்பா?

எப்படியிருப்பினும் தொடர்ந்து ஓமிக்ரான் தாக்கம் என்பது மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய் தேவையானது குறையலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக ஓபெக் நாடுகள் விலை சரிவினை தடுக்கும் பொருட்டு உற்பத்தியினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பினை ஊக்குவிக்கலாம். இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.

நிபுணர்களின் கருத்து?

நிபுணர்களின் கருத்து?

ஆக தங்கம் விலை குறையும்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் வலுவான ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக கடந்த உச்சமாக உள்ளது. ஆக 1855 டாலர்கள் என்ற லெவலை உடைக்கும்போது, நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தங்கத்தின் சமீபத்திய முக்கிய சப்போர்ட் லெவல் 1780 டாலர்களாகவும் அதனை உடைக்கலாம், சற்று குறைந்து ஏற்றம் காணலாம்.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது விரைவில் 1900 – 1910 டாலர்களை விரைவில் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த உச்ச விலையினை உடைத்து மேலே செல்லும் பட்சத்தில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. கோல்டுமேன் சாச்சஸ் அதன் நீண்டகால டார்கெட்டாக 2100 டாலர்களை நிர்ணயம் செய்துள்ள குறிப்பிடத்தக்கது.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, வலுவாக உள்ள நிலையில் அது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமான உள்ள நிலையில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் பதற்றம்

உக்ரைன் பதற்றம்

மேலும் தங்கம் விலையினை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பெரும் பதற்றம் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றது. ரஷ்யா மேற்கொண்டு உக்ரைனுக்கு நெருக்கடியினை கொடுத்ததால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவி வருகின்றது. ஆக இதுவும் தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம்.

காமெக்ஸ் & எம்சிஎக்ஸ் தங்கம்

காமெக்ஸ் & எம்சிஎக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தைகள் மற்றும் இந்திய கமாடிட்டி சந்தைகள் இன்று விடுமுறையாகும். ஆக வரும் தங்கம் விலையில் இதன் தாக்கம் இருக்கலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சந்தையின் போக்கினை பொறுத்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 4,542 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 அதிகரித்து, 36,336 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களாவே வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4955 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 39,640 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சமீப நாட்களாகவே சற்று தடுமாற்றத்திலே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். இதே மீடியம் டெர்மில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே போல ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 5th February 2022: gold prices range bounds after retracement, good opportunity to buy?

gold price on 5th February 2022: gold prices range bounds after retracement, good opportunity to buy?/சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு.. தடுமாறும் தங்கம் விலை .. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.