ஓமிக்ரான் எலியிலிருந்து வந்ததா? சீன விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் பகீர் தகவல்கள்

ஓமிக்ரான் குறித்து சீன விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். ஒரு புதிய ஆய்வின்படி, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு எலிகளிலிருந்து தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது

எங்கள் கூட்டாளர் வலைத்தளமான WION இன் அறிக்கையின்படி, இந்த ஆய்வை சீன (China) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னர் பல பிறழ்வுகளைக் கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு வந்தது என்பது குறிப்பட்டுள்ளது.

எலிகளிலும் மனிதர்களிலும் ஓமிக்ரானின் 5 பிறழ்வுகள்

கொரோனா வைரஸின் (Coronavirus) இந்த பிறழ்வில் வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் ஓமிக்ரான் மாறுபாட்டின் ஐந்து பிறழ்வுகள் எலிகளின் நுரையீரல் மாதிரிகளில் காணப்படுவதைப் போலவே இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ALSO READ | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?

ஓமிக்ரானில் 50க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன

இந்த ஆய்வை நான்காய் பல்கலைக்கழகம் மற்றும் தியான்ஜினில் உள்ள தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இது உயிரியல் பாதுகாப்பு இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானின் தோற்றம் பற்றி இன்னும் தெரியவில்லை. இது 50 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் பல முந்தைய வகைகளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமிக்ரான் பற்றி இந்த மூன்று கூறுகள் உள்ளன 

ஓமிக்ரானின் (Omicron) தோற்றம் பற்றி பரந்த அளவில் மூன்று கோட்பாடுகள் உள்ளன. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரில் வைரஸ் மியூடேட் ஆகிறது அதாவது பிறழ்வு நடக்கிறது என்று ஒரு கருத்து உள்ளது. எனினும், இது கவனிக்கப்படாமல் போய்விட்டது, கோவிட் நோயாளிகளிடையே பிறழ்வு ஏற்படுகிறது, இந்த ஆராய்ச்சியின் படி இது சாத்தியமில்லை என்று மற்றொரு கருத்து உள்ளது. மூன்றாவது கோட்பாட்டின் படி, ஒரு விலங்கு இனம் மனிதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அது மனிதர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல சுற்று பிறழ்வுகளை சந்தித்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. 

ALSO READ | மீண்டும் உச்சம் தொடும் கோவிட் தொற்று: தென் கொரியாவில் திடீர் ஏற்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.