தாடி பாலாஜி பேசிய ஆடியோ அசிங்கத்தை வெளியிட வேண்டுமா? EX மனைவி நித்யா அதிரடி மிரட்டல்

Tamil Biggboss Ultimate Update : விஜய் டிவியின் பிக்பாக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் –வது சீசனில், விஜய் டிவி பிரபலம், தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் பங்கேற்றார். சண்டை சச்சரவுகள் அதிகம் உள்ள நிகழ்ச்சியில், பல சர்ச்சைக்குரிய தருணங்கள் அரங்கேறியது. ஆனாலும் இறுதியில் நல்லிணக்கத்திற்கான வாயப்பு உள்ளது என்பது போல் தொகுப்பாளா கமல்ஹாசனுடன் தோற்றத்தை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தாடி பாலாஜி, நித்யா தம்பதி இருவரும் மாறி மாறி தங்களை குறை கூறிக்கொண்டு தனித்தனியா ஒருவரைப்பற்றி ஒருவர் அவதூரறாக பேசி பேட்டி கொடுத்தனர். அதன்பிறகு இருவரும் இல்லர வாழ்வில் இருந்து பிரிந்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிவுக்கு பின்னரும் சில மாதங்கள் வலைதளங்களில் இவர்களை பற்றிய பேச்சுக்கள் பறந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் 5-வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது 24-மணி நேரமும் ஒடிடி தளமான ஹாஸ்டரில் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், நடந்து முடிந்த 5 சீசன்களில் இருந்தும் பல போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். .இதில் தற்போது தாடி பாலாஜியும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, தனது மகள் போர்ஷிகாவை மிகவும் மிஸ் செய்வதை வெளியிப்படுத்திய நிலையில், தனது முன்னாள் மனைவி நித்யாவையும் அவதூறாகப் பேசினார். பாலாஜியின் அவதூறுக்கு தற்போது நித்யா, போர்ஷிகாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பதில் அளித்துள்ளார்.

அதில், , “பாலாஜி என் கேரக்டரை மிகவும் அசிங்கப்படுத்துகிறார், இதைப் பற்றி நான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவர் என் மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினால், அவர் என்னை அவதூறாக பேசி அனுப்பிய  வாய்ஸ் மெசேஜ்சை நான் நிச்சயமாக வெளியிடுவேன். குடிபோதையில் எனது பாலாஜி என் மகளை திட்டிய வார்த்தைகளின் ஆடியோவும் என்னிடம் உள்ளது.

அவர் மீண்டும் இப்படி பேசினால் இந்த ஆதாரங்களை யூடியூப்பில் வெளியிடுவேன். பார்வைகளைப் பெறுவதற்காக இதைச் செய்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். என் இமேஜை சேதப்படுத்தினால் நான் நிச்சயமாக சும்மா விடமாட்டேன் என்று கூறியுள்ள நித்யா, “வைல்டு கார்டு என்ட்ரியில் எனக்கு ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நுழைவு வாய்ப்பு கிடைத்தாலும், நான் அவரை வறுத்தெடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இதில் போர்ஷிகா பாலாஜி தனது அப்பாவிடம் பேசுகையில், “நீங்க (பாலாஜி) மீடியாவுக்காகத்தான் இதைச் செய்திருக்கிறீர்கள். நல்லது எது கெட்டது எது என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு நான் இப்போது முதிர்ச்சியடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால் நித்யாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி பெற முயற்சிப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர், மேலும் தேவையில்லாமல் தனது மகளை இன்ஸ்டாகிராமில் நேரலைக்கு அனுமதித்ததற்காக அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 “ “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.