ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் முகேஷ் அம்பானி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை : ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபரும், நாட்டின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ காரை வாங்கி உள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவன கார்களை வைத்திருப்பது உலக பணக்காரர்கள் மத்தியில் கவுரவ சின்னமாக கருதப்படுகிறது. இதில், பல்வேறு மாடல் கார்கள் உள்ளன. இந்த வரிசையில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ என்ற வகை கார் 2018ல் அறிமுகமானது. இதன் அடிப்படை விலை 6.95 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின், காரை வாங்குபவர்களின் தேவைக்கு ஏற்ப அதில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப விலை அதிகரிக்கும்.

latest tamil news

இந்நிலையில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ வகை காரை, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் வாங்கினார். தெற்கு மும்பையில் உள்ள டார்டியோ வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ல் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரை பதிவு செய்வதற்காக ஒருமுறை வரியாக 20 லட்சம் ரூபாய் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சாலை பாதுகாப்பு வரியாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த காருக்கு 0001 என்ற பிரத்யேக பதிவு எண் பெறுவதற்கு 12 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.’நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட சொகுசு கார்களிலேயே இதுதான் விலை உயர்ந்தது’ என, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.