கொரோனா பாதிப்பு: ரஷ்யாவில் புதிய உச்சம்

மாஸ்கோ, 
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 071- ஆக பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று பாதிப்பு இந்த அளவுக்கு  உயர்ந்துள்ளதாக  மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பால் மேலும் 661- பேர் உயிரிழந்துள்ளனர்.

 ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.8 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 35 ஆயிரத்து 414- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டாலும், வரும் வாரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருப்பதாக புதின் அறிவித்துள்ளர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.