நகைச்சுவை நடிகர் சுனில் குரோவர் உடல்நலம்; டாக்டர்களிடம் சல்மான் கான் வைத்த கோரிக்கை!

சுனில் குரோவர் பாலிவுட்டின் நகைச்சுவை நடிகர். கபில் சர்மா டிவி நிகழ்ச்சி வழியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். Tandav, Sunflower, Bharat, Gabbar Is Back, The Legend of Bhagat Singh உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவற்றில் Bharat படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார்.

இதய நாளங்களில் அடைப்பு இருந்ததைத் தொடர்ந்து இவருக்கு ஜனவரி 27 இல் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கோவிட் பாசிட்டிவ் எனவும் மருத்துவர்கள் கூறினர். சில நாட்களுக்கு முன்பு ஹாஸ்பிடலில் இருந்து வீடு திரும்பினார் சுனில். அவரது உடல்நலத்தைத் தொடர்ந்து கவனித்து கொள்ளுமாறு சல்மான் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

சுனில் க்ரோவர்

“அறுவை சிகிச்சையின் ஆரம்பத்தில் இருந்தே சல்மான், சுனிலைக் கவனித்து வருகிறார். எல்லாமும் சரியாக இருக்கிறதா எனத் தொடர்ந்து கண்காணிக்க சொல்லித் தன்னுடைய Being Human அமைப்பின் மருத்துவர்களிடம் இதற்காக சல்மான் கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவிக்கின்றனர். சுனிலும் சல்மான் கானும் நல்ல நண்பர்கள் என இருவரையும் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். சுனில் குரோவர், அட்லீ இயக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.