இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல. இவ்வாறான சம்வங்கள் இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வுவாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உணர்ச்சி வசப்படும் மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்காது இதுதொடர்பான விடயங்களை வெளியிடும் போது விசேடமாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் வள்ளங்களை இலங்கையில் ஏலம் விட இருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் பதிலளிக்கையிலேயே இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான மீனவர் அத்துமீறல் சம்வங்களுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ காலத்தில் பிடிக்கப்பட்ட 24 மீன்பிடி வள்ளங்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இரு நாடுகளுக்கிடையில் வரலாற்று ரீதியிலான நல்லுறவு ரீதியில் விடயங்கள் கையாளப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பளார் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.