நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி! மீண்டும் உயர்கின்றது எரிபொருள் விலைஎரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

IOC நிறுவனம் தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு 32.50 ரூவாவும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாம் நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெருமவிடம் வினவியபோது, ​​

IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதன் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலை தொடர்பில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.