அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. எஸ்பிஐ-யின் ஆன்லைன் கணக்கில் எப்படி தொடங்குவது..!

பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அஞ்சலக திட்டங்களில் அதிகம் விரும்பப்படுவது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை தான்.

பொதுவாகவே அஞ்சலக திட்டங்கள் எனும்போது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பதால், மிகவும் நம்பிக்கையான முதலீடுகளாக பார்க்கின்றனர்.

3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

மேலும் சந்தை அபாயம் இல்லாத, கணிசமான நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் இருப்பதால், அஞ்சலக திட்டங்கள் நீண்டகால நோக்கில் பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆன்லைனிலேயே தொடங்கலாம்?

ஆன்லைனிலேயே தொடங்கலாம்?

இதில் கூடுதலான சலுகை என்னவெனில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை வங்கிகளிலும் தொடங்கிக் கொள்ளலாம் என்பது தான். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கியில், எப்படி தொடங்கிக் கொள்வது என்பதை பற்றித் தான். இதனை நாட்டின் எந்தவொரு எஸ்பிஐ வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்தாலும் தொடங்கிக் கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

மேலும் இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக வருடம் 1,50,000 ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் அஞ்சலகத்தின் மற்ற திட்டங்களை போன்றே கடன் வசதி, இடையில் பணம் எடுத்தல், இந்தியாவின் எந்த கிளைக்கும் மாற்றிக் கொள்ளும் வசதி, முதிர்வு காலத்திற்கு பிறகு நீட்டித்துக் கொள்ளுதல், 80சி-ன் படி 1.5 லட்சம் வரிச்சலுகை என பல சலுகைகளும் கிடைக்கிறது.

பெஸ்ட் ஆப்சன்
 

பெஸ்ட் ஆப்சன்

வருடம் டெபாசிட் தொகையினை உங்களுக்கு ஏற்றவஆறு மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை கூட செலுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பெஸ்ட் ஆப்சன் எனலாம்.

 ஆன்லைனில் எப்படி?

ஆன்லைனில் எப்படி?

பொதுவாக இந்த பிபிஎஃப் (PPF) கணக்கினை மிக எளிதாக அஞ்சலகத்திலேயே தொடங்கிக் கொள்ளலாம். அல்லது வங்கிக் கிளைகளிலும் தொடங்கிக் கொள்ளலாம். இதனை எஸ்பிஐ இணைய வங்கியிலும் கூட தொடங்கிக் கொள்ள முடியும். இதனை வங்கி வேலை நேரத்தில் தான் தொடங்க வேண்டும் என்பதில்லை. 24/7 ம்ணி நேரமும் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதனை உடனடியாக தொடங்கிக் கொள்ளலாம்.

என்னவெல்லாம் வேண்டும்?

என்னவெல்லாம் வேண்டும்?

இதற்காக உங்களுக்கு எஸ்பிஐ-யில் சேமிப்பு கணக்கு வேண்டும். ஆன்லைனில் தொடங்க ஆன்லைன் வங்கி சேவை அல்லது மொபைல் வங்கி சேவை ஆப்சன் இருக்க வேண்டும். மேலும் ஆதார் நம்பர் உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். மேலும் இதற்காக உங்களுக்கு இ- கையெப்பம் வேண்டும். தேவையான ஆவணங்கள் சரியாக இருப்பின் உங்களது கணக்கு உடனடியாக தொடங்கிக் கொள்ள முடியும்.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

முதலில் எஸ்பிஐ-யின் https://www.onlinesbi.com என்ற இணைய பக்கத்தில் சென்று லாகின் செய்து கொள்ளவும்.

அடுத்ததாக New PPF Accounts என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது புதியதாக ஒரு பக்கத்தில் தொடங்கும். இதில் வாடிக்கையாளரின் விவரங்கள் இருக்கும். அதனை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மைனர்களுக்கான கணக்கினை தொடங்கினால், கீழாக ஒரு சிறிய பாக்ஸ் இருக்கும். அதனை டிக் செய்து கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் கணக்கு வைத்திருக்க கூடிய வங்கிக் கிளையின் வங்கிக் கிளைக் குறியீடு மற்றும் கிளையின் குறியீடினை உள்ளிடவும்.

அதன் பிறகு உங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என பார்த்த பிறகு, சப்மிட் கொடுக்கவும். அதன் பிறகு உங்களது பிபிஎஃப் கணக்கு உருவாக்கப்பட்டு விடும்.

அதன் பிறகு உங்களது பிபிஎஃப் ஆன்லைன் அப்ளிகேஷனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதனுடன் கே. ஓய்.சி ஆவணங்களையும் இணைத்து நேரிடையாக கிளைக்கு சென்று கொடுக்கவும். மேலும் ஒரு போட்டோ ஒன்றும் தேவைப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to open PPF account in SBI online?check details here

how to open PPF account in SBI online?check details here/அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. எஸ்பிஐ-யின் ஆன்லைன் கணக்கில் எப்படி தொடங்குவது..!

Story first published: Wednesday, February 9, 2022, 17:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.