ஐபோன் 12 வரவால் குறைந்த ஐபோன் 11 விலை: இலவசமாக ஏர்பாட் தர ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐபோன் 12 வரிசை மொபைல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 11 வரிசை மொபைல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.

ஐபோன் 11, 64 ஜிபி அளவுடைய மொபைல் ரூ.54,900, 128 ஜிபி அளவு ரூ.59,900 மற்றும் 256 ஜிபி அளவு ரூ.69,900 ஆகிய விலைகளில் தற்போது கிடைக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் 64 ஜிபி அளவு ரூ.47,900க்கும், 128 ஜிபி அளவு ரூ.52,900 என்றும் குறைந்துள்ளது.

ஐபோன் எஸ்ஈ 2020 64 ஜிபி மாடல் தற்போது ரூ.39,900க்கும், 128 ஜிபி மாடல் ரூ.44,900க்கும், 256 ஜிபி மாடல் ரூ.54,900க்கும் கிடைக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து விழாக்கால சலுகையாக, ஐபோன் 11 வாங்குபவர்களுக்கு இலவசமாக ஏர்பாட் வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஐபோன் 12 மாடல்களின் விலை பல இந்திய வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலையே ரூ.1,19,900. அளவுக்கு ஏற்ப இந்த விலை ஏறும்.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய மாடல்களின் அடிப்படை விலை முறையே ரூ.79,900 என்றும் ரூ.69,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.