"நான்சென்ஸ்.. இப்படித்தான் ஒரு பெண்ணை வரவேற்பீர்களா?".. பொங்கி எழுந்த சாந்திஸ்ரீ

நான் டிவிட்டரிலேயே கிடையாது. என்னைப் பற்றி டிவிட்டரில் பேசப்படுபவை முட்டாள்தனமானவை. ஒரு பெண்ணை இப்படித்தான் வரவேற்பீர்களா என்று காட்டமாக கேட்டுள்ளார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள
சாந்திஸ்ரீ துலிபடி பண்டிட்
.

டெல்லியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் பேசு பொருளானது. காரணம், இவரது பெயரில் உள்ள
டிவிட்டர்
தளத்தில், பலமுறை இந்துத்வா ஆதரவுக் கருத்துக்களை இவர் பதிவு செய்திருந்தார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் தனது நியமனம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பிரஸ் ரிலீஸும் சர்ச்சையானது. காரணம், அதில் பல இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள் இருந்தன. இதை பாஜக எம்பி வருண் காந்தியே கடுமையாக விமர்சித்து படிப்பறில்லாதவர் எழுதியிருப்பது போல உள்ளதாக விமர்சனம் செய்திருந்தார். இந்த பிரஸ் ரிலீஸும் வைரலானது.

இந்த நிலையில் தற்போது அவரது டிவிட்டர் தளம் டிஆக்டிவேட் ஆகியுள்ளது. இந்தப் பின்னணியில் தன்னைச் சுற்றி வலம் வந்த சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார் சாந்திஸ்ரீ. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் டிவிட்டரிலேயே கிடையாது. நான் ஒரு போதும் டிவிட்டரில் இருந்ததில்லை. என்னைப் பற்றி முட்டாள்தனமான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. நான் போட்டதாக கூறப்படும் டிவீட்டுகள் குறித்து எனக்குத் தெரியாது.

நான் ஒரு கல்வியாளர். என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதுதான் ஒரு பெண்ணை வரவேற்கும் விதமா என்று கேட்டுள்ளார் சாந்திஸ்ரீ.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.