காதலர் தினத்தில் தரமான சம்பவம்… திருநங்கைகள் முடிவு!

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகளான சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்

அதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்ய கொள்ள முடிவு எடுத்துள்ள திருநங்கைகள் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான தகவலை உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அகம் மகிழ்ந்த அவர்கள், இருவரையும் ஆசீர்வாதித்து திருமணத்துக்கு டபுள் ஓகே சொல்லிவிட்டனராம்.

என்னது இனிமேல் சமோசா கிடையாதா?.. “கட்” செய்த சுகாதார அமைச்சகம்.. ஏன் திடீர்னு?

தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக நீதிமன்றத்தில் மனு செய்து அதற்கான அனுமதியை பெற உள்ளதாகவும் பூரிப்பு பொங்க கூறுகின்றனர் இத்திருநங்கைகள்

காதலர் தினத்தில் இளைஞர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களிடம் காதலை வெளிப்படுத்துவது உலக அளவில் வழக்கமாக இருந்துவரும்போது, அன்றைய தினத்தில் திருநங்கைகள் இருவர் திருமணம் செய்துகொள்ள உள்ளது கூடுதல் சிறப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.