மராட்டியத்தில் மேலும் 7,142 பேருக்கு கொரோனா தொற்று

மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,142- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் ஒரே நாளில்  20,222- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு  மேலும் 92- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 82,893- ஆக உள்ளது. 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 23 ஆயிரத்து 385- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்து 93 ஆயிரத்து 291- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 247- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 7.59கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.