முன்னணி நடிகையை காதல் திருமணம் செய்யப்போகும் கெளதம் கார்த்திக்..!யார் அந்த நடிகை தெரியுமா?

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் ஹீரோவாக அறிமுகமானார் கெளதம் கார்த்திக். முதல் படமே மணிரத்னத்தின் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில் கடல் படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தொடர்ந்து பல படங்களில் நடித்த கெளதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் திரைப்படம் அவருக்கு சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்து கொடுத்தது. அதன் பின் ஹரஹர மஹாதேவகி,
இருட்டு அறையில் முரட்டு குத்து
, இவன் தந்திரன் போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்தார் கெளதம் கார்த்திக்.

தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும்
மஞ்சிமா
மோகன் காதலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த இவர்கள் அப்போதிலிருந்தே நெருங்கி பழக ஆரம்பித்தனர். நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாறியதாம்.

லதா மங்கேஷ்கரின் சொல்ல மறந்த காதல் கதை..!அவர் யாரை காதலித்தார் தெரியுமா ?

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களது வீட்டினரும் இக்காதலுக்கு பச்சைக்கொடி காட்ட விரைவில் இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறதாம். இருப்பினும் இந்த காதலை இதுவரை இவர்கள் வெளியுலகிற்கு தெரியப்படுத்தாமலே இருந்தனர்.

இவர்களை பற்றி எந்த காதல் வதந்தியும் இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் தற்போதுதான் இவர்கள் காதலிப்பது சமூகத்தளங்களில் கசிந்துள்ளது. அந்த அளவிற்கு தங்கள் காதலை பாதுகாத்து வந்த இவர்கள் விரைவில் அதிகாரபூர்வமாக தங்கள் காதலை வெளிப்படுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரின் மனசையும் கவரும் மருத – மனம் திறந்த ராதிகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.