நான் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறேன்… சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான பிரச்சினைதான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக போராடி வருகிறார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.

கடந்த நவம்பர் மாதம் சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் வாழும் Ullrich Frey (74) என்பவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அவர் உள்ளூர் ஓய்வூதிய அலுவலகத்தை அழைத்து தனக்கு ஏன் இன்னமும் ஓய்வூதியம் வரவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் அளித்த பதில், நீங்கள் இறந்துவிட்டீர்கள், அதனால்தான் உங்களுக்கு ஓய்வூதியம் அனுப்பவில்லை என்பதுதான்…

அதிர்ந்துபோன Frey, என்ன நடந்தது என விசாரனையில் இறங்க, நீண்ட விசாரணைக்குப் பின், இறந்தது அவரது முன்னாள் மனைவி என்பதும், அவருக்கு பதிலாக கணினியில் Frey இறந்ததாக தவறுதலாக பதிவாகியிருந்ததும் தெரியவந்தது.

Frey தன் மனைவியைப் பிரிந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆகவே, அவர் இறந்தது Freyக்கு தெரியவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக Frey இறந்ததாக கணினியில் பதிவாக, அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆக, தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் Frey!
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.