வேலைவாய்ப்பின்மை மற்றும் கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகள்

வேலைவாய்ப்பின்மையால் நாடெங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மையால் தற்கொலைகள்
2018 – 2,841
2019 – 2,851
2020 – 3,548
கடன் தொல்லையால் தற்கொலைகள்
2018 – 4,970
2019 – 5,908
2020 – 5,213
வேலையின்மையில் 2018-ஆம் ஆண்டு 2,841 பேரும் 2019ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020-ஆம் ஆண்டு இது 3,548 ஆக அதிகரித்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல கடனை திரும்பச் செலுத்த முடியாததன் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு 4,970 பேரும், 2019ஆம் ஆண்டு 5,908 பேரும், 2020ஆம் ஆண்டு 5,213 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து வழங்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.