உஷார்… இந்த தவறை செய்தால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

Southern railways news in tamil: ரயில் தண்டவாளங்களைக் கடந்து செல்வதைத் தடுக்கக் கோரியும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், தெற்கு ரயில்வே புதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ரயில்வே பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு  6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2019-20-ம் ஆண்டில் சென்னைகோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புபடையால் சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங் களைக் கடந்ததால் 2,422 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.11.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே குற்றத்துக்காக 2021-ம் ஆண்டு முதல் ஜனவரி 2022 வரை 1,402 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் சட்டத் துக்கு புறம்பாக விபத்துகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக் கில் சென்னை கோட்டம் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரயில்வே நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களில் எல்லை சுவர்களை எழுப்புதல், மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேவையான இடங்களில் நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, சட்டத்துக்கு புறம்பாக ரயில் தண்டவாளங்களை கடப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், ரயில்வே சட்டம், பிரிவு 147-ன் படி 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.