கடைசி போட்டியில் வெல்லப்போவது யார்? : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்



இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகள் இடையேயான  3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கொரோனாவில் குணமடைந்த ஷிகர் தவான் இப்போட்டியில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.