தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல்


அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உறவினர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலடெல்பியா நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் தொடர்புடைய 29 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் உறவினரின் வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்து இரண்டு வெவ்வேறு சமையலறை கத்திகளால் தூக்கத்தில் இருந்த 6 பேரை குத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்கள் 26 முதல் 46 வயதுடையவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், 46 வயது பெண்மணி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமேற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஞ்சிய ஐவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, உறவினரான 29 வயது இளைஞரை சம்பவம் நடந்த பகுதிக்கும் அடுத்த தெருவில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தின் போது பல இளம் குழந்தைகள் வீட்டிற்குள் இருந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் சம்பவத்திற்கான நோக்கம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.