தொடரும் விவாகரத்து… 10 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் ஃபாக்ஸ். இவர் ட்ரான்ஸ்பார்மர்ஸ் சீரிஸ் படங்களில் நடித்து பெரும் பிரபலமானார். 36 வயதான
மேகன் ஃபாக்ஸ்
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி!

தற்போது பிக் கோல்டு பிரிக், தி எக்ஸ்பேண்டப்ள்ஸ் 4, நயா லெஜென்ட் ஆஃப் தி கோல்டன் டால்பின்ஸ், ஜானி அன்ட் க்ளைட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேகன் ஃபாக்ஸ், சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மேகன் ஃபாக்ஸ் ஹோப் அன்ட் ஃபெய்த் படத்தில் நடித்த போது நடிகர் பிரையன் ஆஸ்ட்டின் க்ரீனுடன் காதல் வயப்பட்டார். அப்போது மேகனுக்கு 18 வயதுதான். ஆனால் நடிகர் ஆஸ்டினுக்கு 30 வயது. இதனால் மேகனின் காதலை ஏற்க தயங்கினார் ஆஸ்டின்.

ரஜினியின் தலைவர் 169 படத்தின் ஹீரோயின் இவரா? அசத்தல் போட்டோஸ்!

ஆனால் அவரை பேசி சமாதானப்படுத்தினார் மேகன். சில ஆண்டுகள் டேட்டிங்கிற்கு பிறகு இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார் ஃபாக்ஸ்.

ஆனால் அப்போது அவர் கர்ப்பமானதால் அந்த விவாகரத்து மனுவை ரத்து செய்தார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுகுகு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thalaivar 169: நான் சொல்றவங்கதான் ஹீரோயின்… நெல்சனுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி!

இதன் மூலம் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மேகன் ஃபாக்ஸ். சமீபத்தில்தான் ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் தனது ஐந்தாவது கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ரொம்ப நல்ல பையன்; நல்ல மியூசிக் டைரக்டர் என்ற பெயரும் வாங்குவார் – ஜெயபிரகாஷ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.