நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்வதென்ன?

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11 புள்ளி 8 சதவிகிதம் அதிகம். 2020-ல் பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாக கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60 புள்ளி 2 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 புள்ளி 6 சதவிகிதம் வரை அதாவது 3 ஆயிரத்து 293 வழக்குகள் பாலியல் தொடர்புடையவை என்றும் கூறப்பட்டுள்ளது.
Why cyber crime groups are some of the world's most effective startups
புதுப் புது வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, அசாம் மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற விசாரணை அமைப்பு கூட இதுவரை நிறுவப்படவில்லை என்றும், எனவே மாநில அரசுகள் சைபர் குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.