திடீர் திருமணம் செய்து கொண்ட சன் டிவி நடிகை; பிரபலங்கள் வாழ்த்து

Sun TV actress Shambhavi got married viral video: சன் டிவி சீரியல் நடிகையான சாம்பவி திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அவரின் திருமண வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் கண்மணி. இந்த சீரியல் கொரோனா ஊரடங்கால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த சீரியலில் முத்துச்செல்வி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சாம்பவி குருமூர்த்தி. இவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலின், தெலுங்கு பதிப்பான சாதனா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் விண்ணைதாண்டி வருவாயா சீரியலிலும், சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் சாம்பவிக்கு பிப்ரவரி 11 அன்று பிரசன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சாம்பவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாம்பவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நட்சத்திரா, ரோகிணி உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.