'வலிமை' திருவிழா கன்பார்ம்.. அஜித் ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு..!

தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால் வேற லெவல் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகளில் பல விலக்கம் அறிவித்தது தமிழக அரசு.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ‘
வலிமை
‘ படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

‘வலிமை’ படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்களின் தவம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக
எச் வினோத்
இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் அஜித்.

மகளின் கோரிக்கை நிராகரிப்பு: யாரும் எதிர்பார்க்காததை செய்த ரஜினி..!

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
போனி கபூர்
தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பொங்கல் வெளியீடாக ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர் படக்குழுவினர். ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘வலிமை’ படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தற்போதைய அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வலிமை’ பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.