ஹிஜாப் விவகாரம் : கருத்து சொன்ன எச்.ராஜா… பழைய ட்விட்டை கையில் எடுத்த நெட்டிசன்கள்

H.Raja Say About Hijab Issue : கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஹிஜாப் விவகாரத்தில் பாஜக முத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரின் பழைய ட்விட்டர் பதிவுகளை எடுத்து நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகினறனர்.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப அணிய அனுமதித்தால், நாங்கள் காவித்துண்டுடன் வருவோம் என்று இந்து மாணவர்கள் அறிவித்து அதன்படி காலி துண்டுடன் கல்லூரிக்குள் நுழைந்தனர்.

இந்த விவாகரம் அக்கல்லூரியில் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகா முழுவதும் இந்த விவாரத்திற்கு எதிரான போராட்டங்கள் பரவியது. இதனால் அசாதரான சூழல் நிலவி வரும் நிலையில், இந்து மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக்கொண்டு முஸ்லீம் மாணவர்கள் மத்தியில் செல்வதும், அவர்கள் பதிவுக்கு அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக்கொண்டு செல்வதும் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஹிஜாப அணிவது அரசியலமைப்பு எங்களுக்கு தந்த உரிமை என்று கூறி முஸ்லீம் மாணவிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்து்ளளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பின்னணியில் இந்துத்துவா அமைப்புகள் உள்ளதாகவும், சிலரின் அரசியல் லாபத்திற்காக மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பல்வேறு தரப்பினரும், இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், பாஜக ஆதரவாளர்கள் பலரும் மாணவிகள் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் இந்திய அளவில் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜக பிரபலங்கள் பதிவிடும் கருத்துக்கள் நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் தொடர்பான வீடியோ பதிவை வைத்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டதும், அதற்கு குஷ்பு பதிலடி கொடுத்ததும் வைரலாக பரவியது.

இந்த வரிசையில் தற்போது தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா இணைந்துள்ளார். சமீபத்தில் ஹிஜாப் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்துக்களை பதிவிட்ட அவர்,  ‘பள்ளி சீருடையை அணிய விரும்பாதவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி மதரசாவில் சேருவது நல்லது’ என்று கூறியிருந்தார். பொதுவாக தனது கருத்துக்களின் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் எச்.ராஜா இந்த பதிவுக்கும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

எச்.ராஜாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த பதிவை விமர்சித்து வரும் நெட்டிசன்கள், அவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்து மாணவர்களுக்கு ஆதரவாக பதிவிட்ட ட்விட்டர் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கட்டியிருக்கும் கயிற்றின் அடிப்படையில் அவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஒரு அறிவிப்பில், கையில் கயிறு கட்டி வரும் மாணவர்கள் குறித்து நடவடிககை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் நெற்றியில் திலகமிடுவது, உயர்ஜாதி தாழ்ந்த ஜாதி என்று தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக செயயும் செயல். இது மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் இதனால் இவற்றை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படிருந்தது.

இந்த அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த எச்.ராஜா தனது பதிவில், ‘கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்துக்களின் பழக்கம். எனவே இந்தச் சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். மற்ற மதத்தினர் மத அடையாளங்களுக்கு ஏன் இயக்குநர் தடை விதிக்கவில்லை. இந்து மத உணர்வுக்கு எதிராகச் செயல்படும் பள்ளிக்கல்வி இயக்குநரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இச்சுற்றறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் மாணவர்களுக்கு கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

அப்போது இந்து மாணவர்களுக்கு ஆதவராக தனது கருத்தை தெரிவித்த எச்.ராஜா தற்போது ஹிஜாப் விவகாரத்தில் பொதுநிலையாக இருப்பது போல் மாணவர்கள் அனைவரும் பள்ளி சீருடையில் வரவேண்டும் என்று பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளர்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.