டிசிஎஸ், இன்போசிஸ்-ல் பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் சம்பளம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!

இந்திய ஐடி துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக வழக்கத்தை விடவும் அதிகமான பிரஷ்ஷர்கள் அதாவது , கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தி வருகிறது.

தற்போது இதைவிடவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரஷ்ஷர்களுக்குப் பொதுவாக இந்த ஐடி நிறுவனங்கள் 2.2 முதல் 3.75 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை அழிக்கும் நிலையில் இந்தியாவின் மகிப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளத்தை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சென்னை ஃபோர்டு தொழிற்சாலை மூடப்போவது இல்லை.. ஊழியர்கள் கொண்டாட்டம்.. என்ன நடந்தது தெரியுமா..?!

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களின் வருவாய், லாபம் எவ்வளவு உயர்ந்தாலும், பல ஆண்டுகளாகப் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்தாமல் ஒற்றுமையாக இருந்து வருகிறது.

பிரஷ்ஷர்கள்

பிரஷ்ஷர்கள்

இதில் புதிதாகப் பணியில் சேரும் அனைவருக்கும் 2.5-3.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளமும், முன்னணி கல்லூரி, பெரிய பல்கலைகழத்தில் இருந்து வருபவர்களுக்குக் கேம்பஸ் இண்டர்வியூவ் தேர்வில் 7 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

ஆப் கேம்பஸ் இண்டர்வியூவ்
 

ஆப் கேம்பஸ் இண்டர்வியூவ்

ஆனால் தற்போது டிசிஎஸ் இந்நிறுவனத்தில் கொரோனா காரணமாகக் கடந்த 2 வருடமாகப் பிரபலமாகி வரும் Off-Campus Digital Hiring முறையில் பணியில் சேர்க்கப்படும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குப் பிரஷ்ஷர்களுக்கும் 7.3 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆன் கேம்பஸ்-ல் இருந்து ஆப் கேம்பஸ் தேர்விலும் இத்தகைய பெரும் சம்பளம் அளிப்பது மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

கடைசித் தேதி பிப்ரவரி 25

கடைசித் தேதி பிப்ரவரி 25

இந்த வேலைவாய்ப்புக்கு வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 25. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்க வேண்டும், மேலும் இதற்கான தேதிகள் விரைவில் டிசிஎஸ் நிர்வாகம் அறிவிக்கப்படும். இந்த Off-Campus Digital Hiring மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிக்கேற்ப சம்பளம் பெறுவார்கள் – இளங்கலை பட்டதாரிகள் ஆண்டுக்கு ₹7 லட்சமும், முதுகலை முடித்தவர்கள் ஆண்டுக்கு ₹7.3 லட்சம் சம்பளமும் பெறலாம்.

முக்கிய இணைப்பு

முக்கிய இணைப்பு

டிசிஎஸ் நிறுவனத்தின் உங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும், https://nextstep.tcs.com/campus/#/ டிஜிட்டல் தேர்வு முறையில் கலந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://g91.tcsion.com/FeedbackSolution/openPublishURL.do?publishKey=o6NNCwyBYwiiYXzkp5HSQN%2B%2FvQ3TRu0rA47Xas2Kwec%3D

யார் விண்ணப்பிக்கலாம்..

யார் விண்ணப்பிக்கலாம்..

டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் சிறப்பு வேலைவாய்ப்பை 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் BE/ME, BTech/MTech, MCS/M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அனைத்திற்கும் மேலாக சம்பளம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் டிசிஎஸ் நிறுவனம் 6-12 மாத ஐடி வேலை அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் கல்வித் தகுதியாக 10, 12, பட்டப்படிப்பு ஆகிய அனைத்திலும் 70 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும் என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

டிசிஎஸ்-க்குப் போட்டியாக இன்போசிஸ் நிறுவனம் பிரஷ்ஷர்களுக்குத் தற்போது புதிதாக specialist programmer என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ளது. இந்தப் பதவியில் பணிக்குச் சேர்பவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளம் அளிக்கப்படுகிறது. digital specialist engineer என்னும் பதவிக்கு 6.2 லட்சம் வரைவில் சம்பளம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐடி ஊழியர்கள்

ஐடி ஊழியர்கள்

இந்தத் திடீர் சம்பள உயர்வு தற்போது ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பது மட்டும் அல்லாமல் பிரஷ்ஷர்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு மத்தியிலான சம்பள வித்தியாசம் பெரிய அளவில் குறைகிறது.

இது கட்டாயம் ஊழியர்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படும், ஆனால் நிறுவனங்களுக்கு லாபம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS, infosys is hiring freshers with annual salary package upto ₹7.3 lakh

TCS, infosys is hiring freshers with annual salary package upto ₹7.3 lakh டிசிஎஸ், இன்போசிஸ்-ல் பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் சம்பளம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.